செவ்வாய், 23 அக்டோபர், 2018

சிகிச்சை விதிகள் (எண்வகை தேர்வு)

நோயாளியின் உடல் நிறம், குரல், ஸ்பரிசம், நாடி, நாக்கு, கண்கள், சிறுநீர், மலம் இவைகளைப் பரிசோதித்து நோயின் குறிகுணத்தை அறியலாம். மேலும்,
  • மலம்                -  நிறம், நுரை, இளகல்
  • சிறுநீர்              -  நிறம், எடை, மணம், நுரை
  • விந்து                -  இளகல், நீர்த்தல், கட்டல்
  • கண்கள்            -  நிறம், ஒளி, பீளை, வழியும் நீர்
  • காதுகள்            -  குறும்பி, அழுக்கு, நீர்வடிதல், சீழ்வடிதல், காய்ந்து அடையாதல்
  • மூக்கு                -  சளி, இரத்தம், அழுக்கு, காய்ச்சல், நீர்வடிதல்
  • நாக்கு                -  நிறம், எரிச்சல், சுரப்பு, கோழை படர்தல், தடிப்பு, புண்ணாதல், பேச்சு
  • உடல்                -  நிறம், வியர்வை, சுருக்கம், தடிப்பு, இளைப்பு
  • முடி                   -  நிறம், வளர்ச்சி, உதிரல், வெடிப்பு
  • நகம்                  -  நிறம், உருவம், வெடிப்பு, வழவழப்பு, கோடுகள், சொத்தை, மினுப்பு
  • உதடு                -  நிறம், வீக்கம், வெடிப்பு, புண்
  • நெற்றி              -  நிறம், ஒளி, சுருக்கம்
  • பல்                    -  நிறம், உடைச்சல், ஒளி, சொத்தை, அழுக்கு
  • மேல்வாய்      -  நிறம், வீக்கம்
இவைகளைக் கொண்டு ஒருவரின் நோயை அறியலாம்.




வாதம்
பித்தம்
சிலேத்துமம் (கபம்)
சரீரம்
கருப்பு
மஞ்சள்
வெள்ளை
ஸ்பரிசம்
உஷ்ணம் மற்றும் சீதளம்
அதிஉஷ்ணம்
சீதளம்
கண்கள்
கருப்பு, நீர்வடிதல்
சிவந்த மஞ்சள்
வெள்ளை
மலம்
கருப்பு
சிவந்த மஞ்சள்
 வெள்ளை, சீதளம்
சிறுநீர்
வெள்ளை
சிவந்த மஞ்சள்
வெள்ளை, குழம்பாயும்
சப்தம்
சமதொனி
உரத்த தொனி
ஈன தொனி
நாக்கு
கருப்பு, முள்ளும் வெடிப்பும்
சிவந்த மஞ்சள்
வெள்ளை, சலம் ஊறும்
நாடி
பாம்பு, அட்டை, தவளை, ஓணான்
தரா, மயில், அன்னம்
கோழி, ஊர்க்குருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக