செவ்வாய், 23 அக்டோபர், 2018

சித்த மருத்துவ வகைகள்

சித்த மருத்துவமானது பொது மருத்துவம்பால மருத்துவம்பெண் மருத்துவம்சூல் மருத்துவம்இரண மருத்துவம்காயகல்பம்,  நச்சு மருத்துவம்வர்ம மருத்துவம் என எட்டு வகைப்படும்.

1) பொது மருத்துவம்:

இதில் மனிதர்களுக்குத் தலை முதல் கால்வரை ஏற்படும் 4448 நோய்களின் தன்மைகள்அதன் வகைகள்விளைவுகள்நோயினை தீர்க்கும் வழிமுறைகள்பத்திய முறைகள்நோய் வராமல் தடுக்கும் முறைகளைபக் கூறுகிறது.

2) பால மருத்துவம்:

இதில் குழந்தைகளுக்கு உண்டாகும் இழுப்புசுரம்பேதிதொப்புள் இரணம்திடுக்கிடல்மூச்சுத் திணறல் போன்ற நோய்களுக்கும்இன்ன பிற நோய்களுக்கும் உண்டான மருத்துவ முறைகளைப் பற்றிக் கூறுகிறது.

3) பெண் மருத்துவம்:

இதில் பெண்களுக்கு ஏற்படும் சூதகச் சிக்கல்சூதக வலிபெரும்பாடுஉதிரப் பெருக்குகாலம் தாழ்ந்து வரும் மாதவிடாய் போன்ற நோய்களுக்கான மருந்து முறைகளைப் பற்றிக் கூறுகிறது.

4) சூல் மருத்துவம்:

இது பெண்களுக்குக் கருவாயில் உண்டாகும் அழற்சிவலிநழுவல்விரணம்வெளித் தள்ளல்இரத்தத் தேக்கம்பேறு காலத்தில் உண்டாகும் பொய்வலி,  வலிப்புநஞ்சுக் கொடிவிழாமைமூட்டுக் கிழிதல்பால் வெறிபால் சுரம் முதலிய நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளைப் பற்றிக் கூறுகிறது.

5) நச்சு மருத்துவம்:

இது சகல விதமான நச்சுக்கடிகளின் குறி குணங்கள்அதற்கான சிகிச்சைகள் பற்றியும்மற்ற வகை விஷங்களான தாவரதாதுப் பொருட்களின் விஷங்களின் குணங்கள்,  தன்மைகள் அவற்றிற்கு செய்யும் மருத்துவ சிகிச்சை முறைகள்பற்றிக் கூறுகிறது.

6) இரண மருத்துவம்:

இது கத்திகத்திரிகுறடுசத்திரம்முள் வாங்கிபரகரை வாங்கிஆழிக்போல்,  வட்டிகைமுச்சலாகைபஞ்சமுகம்பிறைக் கோல்குறும்பி வாங்கிகொம்புகுடோரிகாயக்கோல்அட்டக் கோல்ஊசிசெப்புக் குழாய்தெண்டுச் சலாகைசெப்புச்சிலாகைஈயச் சலாகைநயனகத்திமுச்சலாகைமுனிமொழிஒட்டுக்கோல்வெண்கலக் குழல் போன்ற கருவிகளைக் கொண்டு சதையை அறுத்துச் செய்யும் அறுவை மருத்துவத்தை பற்றிக் கூறுகிறது.

7) வர்ம மருத்துவம்:

இது நரம்பு முடிச்சுகள்பூட்டுகள் போன்ற இடங்களில் உண்டாகும் அடிஇடிகுத்துவெட்டுநழுவுதல்பிடிப்பு போன்ற நோய்களுக்கு உண்டான இளக்கு முறைகள்மருத்துவ முறைகள்உள் மற்றும் வெளி மருந்துகள் இவற்றைப் பற்றிக் கூறுகிறது.

 8) காயகல்பம்:

இதில் நோய் நொடியின்றி பலவருடங்கள் வாழ்வதற்கு ஏற்ற மூலிகைகள்பற்பங்கள்கியாழம்கிருதம்செந்தூரம்குழம்புகள்தீநீர்மாத்திரைசூரணம்கல்பம் இவற்றைப் பற்றிக் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக