வியாழன், 25 அக்டோபர், 2018

குணபாடம் (மருந்துகளின் தொகை-4)

கடை சரக்கு வகைகள்:

கடைச் சரக்குகள் என்பவை நாம் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களெயாகும். இவைகளில் பெரும்பாலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் தான். ஆனாலும் இவற்றின் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம். பொதுவாகக் கடைச் சரக்குகள் 64 என்று கூறினாலும், உண்மையில் 70க்கும் மேற்பட்ட கடைச் சரக்குகள் உள்ளன. அவை,
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி
  4. ஓமம்
  5. சீரகம்
  6. கடுகு
  7. வெந்தயம்
  8. கருஞ்சீரகம்
  9. சதகுப்பை
  10. வசம்பு
  11. கடுக்காய்
  12. நெல்லிக்காய்
  13. தான்றிக்காய்
  14. மஞ்சள்
  15. அதிவிடயம்
  16. சிறுதேக்கு
  17. அரத்தை
  18. அதிமதுரம்
  19. கடுகுரோகிணி
  20. புளி
  21. வாய்விளங்கம்
  22. கீச்சிலி கிழங்கு
  23. கர்கடகசிங்கி
  24. காற்போக அரிசி
  25. வாலுழுவை அரிசி
  26. பெருங்காயம்
  27. அரக்கு
  28. சேங்கொட்டை
  29. தாளிசபத்திரி
  30. கிராம்பு
  31. சிறுநாகப்பூ
  32. சடாமாஞ்சில்
  33. கோஷ்டம்
  34. மெழுகு
  35. குங்கிலியம்
  36. குந்திரிக்கம்
  37. கூகைநீறு
  38. கஸ்தூரி
  39. கோரோசனை
  40. குங்குமப்பூ
  41. சந்தனக் கட்டை
  42. சாதிபத்திரி
  43. பாக்கு
  44. சித்திரமூலம்
  45. திப்பிலி மூலம்
  46. சாதிக்காய்
  47. யானை திப்பிலி
  48. கொடுக்கை புளி
  49. கருங்கொடிவேலி
  50. வெண் கடுகு
  51. செவ்வியம்
  52. காட்டு சதகுப்பை
  53. மரமஞ்சள்
  54. கடுக்காய் பூ
  55. மஞ்சிட்டி
  56. சிறுவாலுழுவை
  57. ஏலக்காய்
  58. நிலாவிரை
  59. பேரீச்சங்காய்
  60. இலவங்கப்பட்டை
  61. இலவங்கப் பூ
  62. இலவங்கப்பத்திரி
  63. மாசிக்காய்
  64. கசகசா
  65. வலம்புரிக்காய்
  66. தக்கோலம்
  67. அரிசிவிதை
  68. கொத்தமல்லி
  69. வெள்ளைப்பூண்டு
  70. போளம் (போளம் - கற்றாழையின் பால்)
  71. சிவதை வேர்
  72. நேர்வாளம்
  73. சாம்பிராணி
  74. கர்ப்பூரம்
  75. புழுக்குச்சட்டம்
  76. சவ்வாது
  77. குக்கில்
  78. அக்கரகாரம்
  79. ஐவித நெய்
  80. தாமலபத்திரி
  81. பிசின்


2 கருத்துகள்:

  1. உலோக அலேகங்களைப் பற்றி ஏதோ ஒரு சித்த நூலில் படித்தேன் , நூல் பெயர் தெறியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீங்கள் படித்த நூல் மருத்துவம் சார்ந்ததா அல்லது பொதுவான வேதியியல் நூலா என்பது தெரிந்தால் என்னால் இயன்றவரை பதிலளிக்க முயல்கிறேன் ஐயா.

      நீக்கு