(b) முக எலும்புகள் :
1) நாசி எலும்பு (Nasal Bone) : நீண்டதும், சிறியதுமாக சதுர வடிவம் கொண்டதுமான நாசி எலும்புகள் இரண்டும் மூக்கடியில் கண்குழிகளுக்கு இடையில் ஒன்றோடு ஒன்று அணைந்து இருக்கும். இது நெற்றி எலும்பு, பாடீர எலும்பு, மேல்தாடை எலும்பு மற்றும் அடுத்த நாசி எலும்புடன் இணைந்து பொருந்தி இருக்கும்.
2) மேல்தாடை எலும்பு (Maxilla Bone) : இரண்டு மேல்தாடை எலும்புகள் இணைந்து மேல்வாய் உண்டாகிறது. வாய், நாசி, கண்குழி என்ற மூன்று அறைகளும் யுக பள்ளம், சதுக தாடை பள்ளம் எனும் இரண்டு பள்ளங்களும், சதுக தாடை கமர், பாதவதாடை கமர் எனும் இரண்டு கமர்களும் உண்டாக இந்த எலும்பு காரணமாக உள்ளது.இந்த எலும்பு ஐந்து பகுதிகளாக காண்டம், கவுள்விகம், நாசிவிகம், காவடவிகம், அண்ணவிகம் என பிரிக்கப்படுகிறது.
(a) காண்டம் (Frontal Process) : இது குழாய் போன்ற வடிவில் இருக்கும். இது முகபக்கம், யுகபக்கம், குவளைபக்கம், நாசிபக்கம் என நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
- முகபக்கம் (Alveolar Canals) : இது முன்னுக்கும் புறத்துக்கும் இருக்கும். இதில் முன்வாய் பற்களின் அடியில் உள்ள பள்ளத்தின் வழியாக நாசி இறக்கி பேசி கிளம்புகிறது. இந்த பள்ளம் லூனப்பள்ளம் எனப்படும்.
- யுகபக்கம் (Infra-Orbital Margin) : இது பின்னுக்கும் புறத்துக்கும் அமைந்து யுக பள்ளத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் உள்ள புடைப்பு கடைசிப்பல் முளைத்த பின் தெளிவாக தெரியும்.
- குவளைபக்கம் (Infra-Orbital Foramen) : இது மெல்லியதும், அழுத்தமும், சதுரமும் போன்ற வடிவில் இருக்கும். இது கண்குழியின் ஒரு பகுதியாகும். இதன் பின்பகுதியில் சதுகத் தாடைத்தமர் இருக்கும். இதன் முன்பகுதி சதுக எலும்பின் குவளை தகட்டுடன் சந்திக்கும்.
- நாசிபக்கம் (Canine Fossa) : இது மேல்தாடை எலும்பு நாசியுடன் சந்திக்கும் பகுதியாகும்.
(b) கவுள்விகம் (Zycomatic Process) : முக்கோண புடைப்பாய் முன்பக்கத்துக்கும், யுக பக்கத்திற்கும் இடையில் இருக்கும் இது முன்னும் பின்னும் கவிவாக இருக்கும். இதன் அழுத்தமற்ற பகுதி கவுள் எலும்புடன் பொருந்தும்.
(c) நாசிவிகம் (Nasal Notch) : இது தடித்ததும், முக்கோண வடிவமும் கொண்டு மூக்கின் பக்கமாக அகமும், பின்னும் நோக்கி ஏறுகிறது. இதன் உள்பக்கம் நாசி அறையின் புறச்சுவரால் மேலே நெற்றி எலும்புடன் பொருந்தும்.
(d) காவடவிகம் (Palatine Process) : அதிகம் தடித்த பகுதி. இதில் பற்கள் இறுகியிருக்கும். எட்டு தாழ்ந்த குழிகள் உண்டு. இக்குழிகளின் ஆழமும், அகலமும் அவைகளில் இறுகியிருக்கும் பற்களின் நீளத்திற்கும், பற்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப இருக்கும்.
(e) அண்ணவிகம் (Alveolar Process) : பலமான தடித்த தகடாய் உள்ப்பக்கத்தில் இருந்து நாசியையும், வாயையும் பிரிக்கும். இதன் கவிழ்ந்த மேல்பகுதி நாசி அறையின் தளமாகும். இதன் முன்பகுதி தடித்து அதிலிருந்து ஒரு மெல்லிய புடைப்பு எழுந்து கூடக எலும்பு தங்குவதற்கு வசதியாக அமைகிறது.
3) அசுரு எலும்பு (Lacrimal Bone) : இது மிகவும் மெல்லிய எலும்பு. கண்குழியை உண்டாக்கும் ஏழு எலும்புகளில் இதுவும் ஒன்று. இது கண்ணீர் குழியின் உட்புற சுவற்றில் அமைந்திருக்கும். கண்ணீர் சுரப்பி மற்றும் அதன் குழாய்கள் இதன் வழியாக செல்லும். இது நெற்றி எலும்பு மற்றும் பாடீர எலும்புடன் இணைந்துள்ளது.
4) கவுள் எலும்பு (Zycomatic Bone) : சதுர வடிவமான கவுள் எலும்புகள் இரண்டும் முகத்தின் மேல்புறத்தில் இடம்பெற்று கன்னக் கதுப்பின் புடைப்பாக அமையும். இதன் வெளிப்பக்கம் குவிந்து அழுத்தமாகவும், சிறு நரம்புகள் செல்ல துளை உள்ளதாகவும் இருக்கும்.இதன் உட்பக்கம் கவிந்து காணப்படும்.
5) தாலு எலும்புகள் (Palatine Bone) : நாசி அறையின் பின்புறம் அமைந்த தாலு எலும்புகள் இரண்டும் மேல்தாடை எலும்புக்கும், சதுக எலும்பின் பாதவவிகத்திர்க்கும் இடையில் சொருகப்பட்டு இருக்கும். ஒவ்வொரு எழும்பும் கண்குழி, நாசி, வாய் எனும் மூன்று அறைகளிலும், யுகபள்ளம், சதுக தாடைப் பள்ளம், பாதவ பள்ளம் என்னும் மூன்று பள்ளங்களிலும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு எலும்பிலும் திகந்தத் தகடு, இலம்பத் தகடு என்ற இரண்டு தகடுகள் உள்ளன.
- திகந்தத் தகடு (Horizontal Plate) : இது தடித்த சதுர வடிவில் இருக்கும். இதன் மேல்பகுதி கவிந்த நாசி அறையின் தளப் பகுதியாகும். இது தாலு இறக்கி பேசியின் நரம்பு பற்றுவதற்கு புருவம் போன்ற புடைப்பு கொண்டது
- இலம்பத் தகடு (Perpendicular Plate) : இது இது நீணடு, மெல்லியதாக இருக்கும். இதன் வெளிப்பக்கம் சொறிவும், ஒழுங்கற்ற தன்மையும் கொண்டு மேல்தாடை எலும்பின் உள்பக்கத்துடன் பொருந்தும்.
6) கீழ்நாசிச் சுருள் எலும்பு (Inferior Nasal Concha) : இது நாசியில் அமைந்த மூன்று இணை எலும்புகளில் ஒன்று. நாசிப் பள்ளத்தில் அமைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப் படலத்தினால் உட்சுவாசத்தின்போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக் குழாயினுள் செல்ல இவ்வெலும்பு பயன்படுகிறது. இது மேல்தாடை, அசுரு, தாலு, பாடீர எலும்புடன் பொருந்தும்.
7) கூடக எலும்பு (Vomer Bone) : இது நாசி அறை இரண்டிலும் பின்பகுதியில் சுவர் போன்று அமைந்த தகட்டெலும்பு ஆகும். இது சதுகம், பாடீரம், மேல்தாடை, தாலு எலும்புகளுடன் பொருந்தும்.
8) கீழ்த்தாடை எலும்பு (Mandible Bone) : இது முக எலும்புகளில் பெரியதும், பலமும் கொண்ட எலும்பு. இதில் கீழ்வாய் பற்கள் இறுகி இருக்கும்.இது வளைந்த, திகந்த பங்காகிய காண்டமும், காண்டத்திலிருந்து எழும்பும் இரண்டு சாகைகளையும் கொண்டது.
- காண்டம் (Body) : இதன் வெளிப்பக்கம் குவிவும், மேல்கீழாக கவிவும் கொண்டது. இதன் குவிந்த முக்கோண பகுதி சம்பவிகம் எனப்படும். இதன் மேல்லோரமாகிய காவட ஓரத்தின் முற்பகுதி ஒடுக்கமாகவும், பிற்பகுதி விசாலமாகவும் அமைந்து கீழிவாய் பற்கள் இறுகுவதர்க்கு ஏதுவாய் பதினாறு குழிகளைக் கொண்டிருக்கும்.
- சாகை (Ramus) : சதுர வடிவம் கொண்ட இது வயதிற்கு ஏற்ப மாறும். சிசுவில் காண்டத்தோடு ஒரே நேராய் இருக்கும். வாலிபத்தில் சரிவாக இருக்கும். ஆண்களுக்கு காண்டத்தோடு சரிகோணமாக இருக்கும். பிறகு முதிய வயதில் பற்கள் விழுந்தபின் மறுபடியும் சரிவாகும்.
(c) முகம் (Face) :
இது நீண்ட வட்ட வடிவமும், பள்ளம் தீடியுள்ளதுமாய்க் கண்ணுக்கும், நாசிக்கும் இடம் குழிக்கப்பட்டிருக்கிறது. மேலே நாசிப் புடைப்புகளும், கண்குழியின் மேலோரமும், கீழே மோவாய்க் கட்டையும், பக்கங்களில் கீழ்த்தாடை எலும்பின் சாகைகளின் முன்னோரமும், கவுள் எலும்பும் இதற்கு இல்லை. நடுவரியில் மேலிருந்து கீழேவர நெற்றி எலும்பின் உள்ளுறைகளின் நிலையத்தைக் காட்டுகிற நாசிப்புடைப்புகளும், கண்குழி மேல்புருவமும், நாசி புடைப்புகளின் கீழ் நாசி எலும்புகளாலும், மேல்தாடையின் நாசி விகங்களால் ஆன வன் நாசியும், நாசி எலும்புகளுக்கிடையில் நாசி இடைக் கரேகையும், இதற்கு வெளிப்பகுதியில் நாசித் தாடை ரேகையும், நாசி எலும்பின் பின் கீழ் அரச இலை வடிவான முன் நாசி வாயிலும் தோன்றும்.
(d) கண்குழிகள் (Orbital Plate) :
இவை முகத்திலேயே உள்ள குழி வடிவிலான இரண்டு (b) குழாய்கள். இவை ஒவ்வொன்றும் நெற்றி, சதுகம், பாடீரம், அசுரு, மேல்தாடை, கவுள், தாலு என்னும் ஏழு எலும்புகளால் ஆனது. இதில் நெற்றி, சதுகம், பாடீரம், என்னும் மூன்று எலும்புகளும் இரண்டுக்கும் பொதுவாகும்.
(e) நாசியறைகள் (Nostrils) :
ஒன்றிலிருந்து ஒன்று மெல்லிய இலம்பத் தகடால் பிரிக்கப்பட்டு முகத்தின் நடுவில், அண்ணத்திலிருந்து அடிக்கபாலம் வரைக்கும் அளாவி இருக்கிற ஒழுங்கற்ற இரண்டு அறைகள். இதன் முன் துவாரங்கள் முகத்தில் தோன்றும். பின் துவாரங்கள் தொண்டையோடு பொருந்தும்.
(f) தனுஎலும்பு (Hyoid Bone) :
இது நாவைத் தாங்கிக் குரல்வளைக்கு மேலே முன் கழுத்தில் புடைப்பாக இருக்கும், வளைந்த, ஒடுங்கிய, சிறு எலும்பு. இதன் காண்டம் சதுர வடிவில் முன்பக்கம் குவிந்து, இலம்பப் புருவத்தினால் இரண்டாய் பிரிந்து இருக்கும். இதன் இரண்டு பெரிய கொம்புகள் காண்டத்தின் இரு பக்கங்களிலிருந்து கிளைத்து பின்நோக்கும். இதன் இரண்டு சிறு கொம்புகள் பெரிய கொம்புகள் காண்டத்துடன் பொருந்தும் இடத்தில் முளைத்து இருக்கும் சிறு கிளைகள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக