வியாழன், 9 ஜூலை, 2020

உடற்கூறியல் - 2 (எலும்பியல் - Osteology)

நமது உடலில் வலிமை பொருந்திய பாகமாக எலும்புகள் உள்ளது. இதன் வெளிப்புறம் செவ்வெண்மை நிறமும், உள்புறம் சிவப்பு நிறமும், எலும்பிற்கு பலம் கொடுக்கச் சுண்ணாம்பு (Calcium) மூன்று பங்கும், பசை போன்ற பொருள் ஒரு பங்கும் உள்ளது. இந்தப் பசை போன்ற பொருள் வயதுக்கு ஏற்ப அதிகமாகவும், குறைவாகவும் உள்ளது. அதாவது வயது குறைவாக இருக்கும்போது இந்தப் பசைப் பொருள் அதிகமாக இருப்பதால் எலும்புகள் விரைவில் உடையாமல் வளையும் தன்மை கொண்டிருக்கும். ஒருவேளை உடைந்தாலும் விரைவில் இணைந்துவிடும். வயது ஏற ஏற இந்தப் பசை குறைந்து முதுமையில் மிகக் குறைவான அளவில் மட்டுமே இருப்பதால் எலும்புகள் தேய்மானம் அடைவதோடு உடையவும் செய்கிறது. இந்தப் பசைப் பொருள் குறைவாக இருந்தால் மட்டுமே எலும்புகளைப் பற்றும் நோய்கள் நமக்கு உண்டாகிறது.

எலும்புகளின் வடிவம் : எலும்புகளின் தொழிலுக்கு ஏற்ப அதன் வடிவம் அமைந்துள்ளது. எலும்புகளின் வடிவம் நீளம், குறள், தகடு, கலவை என்ற நான்கு பிரிவுகளில் அடங்கும்.

  1. நீள எலும்புகள் : தேக பாரத்தை தாங்கவும், அதற்கு இயக்கத்தைத் தரவும் பயன்படும். ஆரை, இரத்தினி, தொடை, நளகம், சரம், கரபம், புரகுற்பம், விரல் எலும்புகள் முதலியவை நீள எலும்புகளாகும்.
  2. குறள் எலும்புகள் : பலமும், இறுக்கமும், சொற்ப அசைவும் கொண்ட எலும்புகள்.
  3. தகட்டெலும்புகள் : உள்ளுறுப்புகளை பாதுகாக்கவும், பேசிகள் (இரத்த நாளங்கள்) பற்றுவதற்கு எலும்புகள் விரிவடைந்து இருக்க வேண்டிய இடங்களிலும் எலும்புகள் தகடாய் அமைந்து இருக்கும். பிடர், பித்திகை, நெற்றி, நாசி, அசுரு, கூடகம், வாகு, அனாமிகை முதலிய எலும்புகள் தகட்டு எலும்புகளாகும்.
  4. கலவை எலும்புகள் : மேற்கூறிய மூன்று வகுப்பிலும் சேராத எலும்புகள் கலவை எலும்புகள் எனலாம். முள்ளேலும்புகள், பீடிகை, புச்சம், கேநாரம், சதுகம், பாடீரம், மேல்தொடை, கீழ்த்தொடை, தாலு, கீழ்சுருள், தனு முதலிய எலும்புகள் கலவை எலும்புகளாகும். (இங்குக் கூறப்பட்ட எலும்புகளின் பெயர்கள் தூய தமிழில் உள்ளது. அவற்றைப் பற்றித் தனியாகப் படங்களில் காண்போம்.)

நமது கங்காளத்தில் (எலும்பு மண்டலம்) 206 எலும்புகள் உண்டு. அவை,

எலும்புகளின் வகைகள்

எண்ணிக்கை

முள்ளந்தண்டு, பீடிகை, புச்சம் உட்பட

26

கபால எலும்புகள், பீடிகை, புச்சம் உட்பட

08

செவி  எலும்புகள், பீடிகை, புச்சம் உட்பட

06

முக  எலும்புகள், பீடிகை, புச்சம் உட்பட

14

தனு எலும்புகள், நெஞ்செலும்புகள், பழுக்கள் உட்பட

26

உற்காயம் இரண்டும் நெஞ்செலும்புகள், பழுக்கள் உட்பட

64

அதகாயம் இரண்டும் நெஞ்செலும்புகள், பழுக்கள் உட்பட

62

மொத்த எண்ணிக்கை

206

முள்ளந்தண்டு வம்சிகள் :

            முள்ளெளும்புகளின் கோவையே முள்ளந்தண்டு (முதுகுத்தண்டு) ஆகும். இது வலிமையானதும், அசையக் கூடியதுமான தூண் போன்ற அமைப்பில் உள்ளது. இது கசேரு என்றும் அழைக்கப்படும்.நாம் பிறக்கும்போது 33 முள்ளந்தண்டு எலும்புகளைக் கொண்டிருந்தாலும், உடல் வளரும்ோது, நிரலின் சில பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து கொள்வதனால், வளர்ந்தவர்களில் தனித்தனியாக இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும். இவை அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருக்கும்.


            முதுகுத் தண்டில் உள்ள முள்ளெளும்புகள் வம்சிகள் எனப்படும். நமது முதுகுத்தண்டில் உள்ள வம்சிகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை கழுத்து, முதுகு, இடுப்பு, பீடிகை, புச்ச வம்சிகள். இவற்றில் கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு வம்சிகள் முழு வளர்ச்சி வளர்ச்சி அடைந்ததால் அவை நிறை வம்சிகள் எனப்படும். பீடிகை மற்றும் புச்ச எலும்புகள் முழு வளர்ச்சி அடையாத எலும்புகள் என்பதால் அவை குறை எலும்புகள் எனப்படும்.







            ஆண் மற்றும் பெண்களின் முதுகுத்தண்டில் பீடிகை எலும்புகள் மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். பெண்களின் பீடிகை எலும்புகள் மட்டும் மேற்பகுதி சற்று நேராகவும், அடிப்பகுதி அதிக வளைவாகவும் இருக்கும். இந்தப் பீடிகை எலும்புகள் அதிகம் சரிந்து இருப்பதால் கூபக அறை (கருப்பை அறை) விசாலமாகவும், பீடிகையின் புடைப்பு அதிகமாகவும் இருக்கும்.

நிறை வம்சிகள் - 24

கழுத்து - Cervical - வம்சிகள் (C1 to C7)

7

முதுகு - Thoracic - வம்சிகள் (T1 to T12)

12

இடுப்பு - Lumbar - வம்சிகள் (L1 to L5)

5

குறை வம்சிகள் - 9

பீடிகை - Sacral - வம்சிகள் (S1 to S5)

5

புச்ச - Coccygeal - வம்சிகள் (Coccyx bones)

4

7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் - இவை C1 - C7 எனப்படும்.

12 நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் - இவை T1 - T12 எனப்படும்.

5 இடுப்பு முள்ளந்தெண்டெலும்புகள் - இவை L1 - L5 எனப்படும்.

5 பீடிகை எலும்புகள் - இவை S1 to S5 எனப்படும்.

3 புச்ச எலும்பு - முள்ளந்தண்டில் இறுதியிலுள்ளது. இது வாலெலும்பு எனப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக