வெள்ளி, 31 ஜூலை, 2020

உடற்கூறியல் -16 (உடலின் வேகங்கள் பதினான்கு)

நம் உடலில் இயற்கையாய் தோன்றும் வேகங்கள் பதினான்கு. இவற்றைத் தடுத்தாலோ, அடக்கினாலோ நோய்கள் ஏற்படும். அவை யாதெனில்..,

அபான வாயு : இதை தடுத்தாலோ, சிறிது சிறிதாக வெளியேற்றினாலோ மார்பு நோய், வாதகுன்மம், குடல் வாயு, உடல் முழுதும் குத்தல், குடைச்சல், வல்லை வாதம் ஏற்படும்.

தும்மல் : மூக்கில் உள்ள கிருகர வாயுவின் தொழிலாகிய தும்மலை தடுத்தால் அது சூடாகி மேலேறும். அதனால் தலை முழுவதும் வலி, உடல் தெரித்து விழுவது போலத் தோன்றுதல், முகவாதம், இடுப்பு வலி ஏற்படும்.

சிறுநீர் : இதைத் தடுத்தால் நீரடைப்பு, நீர்த் தாரையில் புண், சீழ் மற்றும் ரத்தம் வடிதல், ஆண்குறி சோர்வுடன் குத்தல், மூட்டுகளில் வலி, வயிற்றில் அபான வாயு சேர்தல் ஏற்படும்.

மலம் : இதைத் தடுத்தால் அபான வாயு பெருகி சலதோடம், முழங்காலின் கீழே நோய் ஏற்படும். இந்த அபான வாயு சூடாகி மேலேறி தலையில் சேர்ந்து தலைபாரம், ஒலியுடன் அபான வாயு பிரிதல், உடல் வலிமை குறைதல் ஏற்படும்.

கொட்டாவி : இதைத் தடுத்தால் முகம் வாடல், இளைப்புக்குறி காணுதல், செரியாமை, நீர்நோய், வெள்ளை நோய், அறிவு மங்கல், வயிற்றில் நோய் ஏற்படும்.

பசி மற்றும் தாகம் : இவற்றைத் தடுத்தாலோ அடக்கினாலோ உடல் உறுப்புகள் சரிவர இயங்காது, சூலை, பிரமை, உடல் இளைப்பு, முக வாட்டம், எலும்பு சந்துகளில் நோய் ஏற்படும். மேலும் பலநாள் பசியை அடக்கி வர மூலத்தில் சூடு கண்டு அதனால் தாதுக்கள் வற்றி இளைப்பு நோய் ஏற்படும்.

இருமல் மற்றும் இளைப்பு : இவற்றில் இருமலை தடுத்தால் கடும் இருமல், மூச்சுக் காற்றில் கெட்ட நாற்றம், தமரக (இதயம்) நோய் ஏற்படும். இளைப்பை தடுத்தால் அதிக வெப்பம் உண்டாகி நீர் மேகம், குன்மம், மூர்ச்சை, குளிர் ஏற்படும். மேலும் தும்மலை தடுத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

தூக்கம் : இதை அடக்கினால் தலைக்கணம், கண் சிவந்து பீளைகட்டி எரிதல், செவிட்டுத் தன்மை, தெளிவற்ற பேச்சு, சோம்பல் ஏற்படும்.

வாந்தி : இதை அடக்கினால் புழுக்கடியால் ஏற்படும் தடிப்புகள் போன்ற தடிப்புகள் காணும், நமைச்சல், பாண்டு, கண்நோய், பித்த விடபாகம், சுரம், இரைப்பு, இருமல் ஏற்படும்.

கண்ணீர் : இதைத் தடுத்தால் தமர்வாயு, பீனிசம், கண்நோய், தலையில் புண் ஏற்படும்.

சுக்கிலம் : இதைத் தடுத்தால் சுரம், நீர்க்கட்டு, தானாக விந்து வெளியேறுதல், கைக்கால் மூட்டுகளில் நோய், மாரடைப்பு, வெள்ளை ஏற்படும்.

மூச்சு : இதை அடக்கினால் இருமல், வயிறு பொருமல், சுவை அறியாமை, சூலை நோய், சுரம், வெட்டை ஏற்படும். (இதன் காரணமாகவே ஹடயோக பிராணாயாம பயிற்சிகளில் வரும் மூச்சை அடக்கும் கும்பக பயிற்சி கூடாது என்று தமிழ்ச் சித்தர்கள் தெளிவுபட கூறினர். சித்தர்கள் வகுத்த யோக முறைகளில் மூச்சு தானாக அடங்கும் முறைகள் மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டது..)

உடற்கூறியல் -15 (தோல், நகம், உரோமம், ஏழுவித உடல் கட்டுகள்)

தோல் / சருமம் (Skin) :
நமது உடலை மூடிக்கொண்டிருக்கிற தோலானது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. அவை மேல்தோல் (Epidermis), நடுத்தோல் (Dermis), அடித்தோல் (Hypo-Dermis) ஆகும்.
  1. மேல்தோல் (Epidermis) : இது தோலின் மேல்புற எல்லையாகும். இது நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்தல், உடலின் நீர் ஆவியாவதை தடுத்தல், உடலுக்குள் நீர் புகாமல் தடுத்தல், அதிகப்படியான நீரை வியர்வை வழியாக வெளியேற்றல் போன்ற பணிகளைச் செய்கிறது.
  2. நடுத்தோல் (Dermis) : இது தோலின் நடுப்பகுதி அல்லது உள்சருமம் எனப்படும். இது இணைப்பிழைகளால் ஆனது. இதனால் அழுத்தம், இறுக்கம் போன்றவற்றிலிருந்து மெத்தை போலப் பாதுகாக்கிறது. இது தோலில் அதிக ஆழத்தைக் கொண்டுள்ளது. அதனால் இதில் வியர்வை சுரப்பிகள், மயிர்க்கால்கள், தோலை வறண்டு போகாமல் காக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous Gland), நகக்கணு, இரத்த நாளங்கள் ஆகியவை இதில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள பழுப்பும், கருப்பும் கலந்த ஒரு பொருள் (Melanin) நமது தோலுக்கு நிறத்தைத் தருகிறது.
  3. அடித்தோல் (Hypo-Dermis) : இது தோலின் ஒரு பகுதியாக இல்லாமல் நடுத்தோலுக்கு கீழ் அமைந்துள்ள பகுதி. இது எலும்பு, தசை ஆகியவற்றை தோலுடன் இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாக உள்ளது.மேலும் நரம்புகள், இரத்தம் ஆகியவற்றை தோலுடன் இணைக்கும் பணியையும் இது செய்கிறது.
நகம் (Nail) : இது வெளித்தோலில் உள்ள ஒருவித புரதப்பொருளால் (Keratin) உண்டாகிறது. இது நமது புறங்கை, புறங்கால் பகுதிகளில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக, சற்று வளைந்த தகடுபோல உள்ள பகுதி. நகத்துக்கும், உடலின் மேல் புறத்தில் அமைந்த மேல்தோலுக்கும் வித்தியாசம் இல்லை.

உரோமம் / மயிர் (Hair) : நடுத்தோலிலிருந்து உரோமம் பிறக்கிறது. சில இடங்களில் உரோமம் அளவில் குறைந்தும், சிரசில் உண்டாகும் ரோமம் அளவில் நீண்டும் காணப்படும். மீசை, தாடி போன்ற பகுதியில் இருக்கும் உரோமம் சற்று தடிமனாக இருக்கும்.

ஏழுவித உடற்கட்டுகள் :
சாரம் : இது உடலையும் மனதையும் ஊக்கமுறச் செய்யும். இது கூடினால் கபம் அதிகரிக்கும், பசி குறையும். இது குறைந்தால் தோல் சுரசுரப்பு, உடல் வருத்தம், வாட்டம், இளைப்பு ஏற்படும்.

இரத்தம் : இது அறிவு, வன்மை, ஒளி, ஒலி செருக்கு இவைகளை நிலைக்கச் செய்யும். இது கூடினால் புருவம், உச்சி, கழுத்து, மார்பு, கொப்பூழ், உதடு, அண்டம், முழங்கால், கணுக்கால், இடுப்பு, கால் பெருவிரல், சுட்டுவிரல், தோலின் உட்புறம், வெளிப்புறம் கொப்புளங்கள் காணும். இடப்பாட்டீரல் (மண்ணீரல்) வீக்கம், கட்டிகள், சூலை, பசியின்மை, ரத்த வாந்தி, ரத்த பித்தம், ரத்த மூத்திரம், மிகச் சிவந்த கண், சிவந்த தடிப்பு, சிவந்த நிறத்தோல், பெருநோய், காமாலை, வெறி முதலியன ஏற்படும். இது குறைந்தால் புளிப்பும் குளிர்ச்சியும் உள்ள பொருளில் விருப்பம், நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் மாற்றம் ஏற்படும்.

தசை : இது உடல் உருவத்தை அதன் தொழிலுக்கு ஏற்ப அமைத்தல், எலும்பை வளர்த்தல் போன்றவற்றை செய்யும். இது கூடினால் கண்டமாலை, கிரந்தி, கன்னம், வயிறு, தொடை, ஆண்குறி இவற்றில் கட்டி ஏற்படும். இது குறைந்தால் உடல் சோர்வு, மூட்டுகளில் நோய், தாடை, பிட்டம், ஆண்குறி, தொடை போன்ற இடங்களில் சுருக்கம் ஏற்படும்.

கொழுப்பு : இது சகல உறுப்புகளும் சிரமமின்றி வேலை செய்ய வழவழப்பான பசையை தருகிறது. இது கூடினால் தசை மிகுந்தால் வரும் நோய்களோடு, களைப்பு, பெருமூச்சு, பிட்டம், குறிகள், வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் தொங்கும் சதை பெருகும். இது குறைந்தால் இடுப்பில் வலிமை குறையும், இடப்பாட்டீரல் வளர்ச்சி, உடல் இளைப்பும் ஏற்படும்.

எலும்பு : இது உடலை ஒழுங்காக நிறுத்தி வைக்கவும், உள்ளுறுப்புகளை பாதுகாக்கவும், உடல் அசைவிற்கு அடிப்படையாகவும் இருக்கும். இது கூடினால் எலும்புகளும், பற்களும் அதிகரிக்கும். இது குறைந்தால் எலும்பு சந்துகளில் வலி, பற்கள் கழன்று விழுதல், மயிர்கள், நகங்கள் வெடித்தல், உதிர்தல் ஏற்படும்.

மஜ்ஜை : இது எலும்பினுள் நுழைந்து அவற்றிற்கு வன்மையும், மென்மையும் தரும். இது கூடினால் உடல் மிகவும் பெருத்தல், விரல் கணுக்களின் அடி பருத்தல், கண் கணத்தல், சிறுநீர் குறைதல் ஏற்படும். இது குறைந்தால் எலும்புகளில் துளை விழுதல், கண்ணில் இருள் கம்மலும் ஏற்படும்.

விந்து : இது கரு உற்பத்திக்கு ஆதாரமாய் விளங்கும். இது கூடினால் பெண்களிடம் காதல் மிகும், கல்லடைப்பு ஏற்படும். இது குறைந்தால் புணர்ச்சியில் விந்து குறைவாக வெளிப்படுதல், ரத்தம் வடிதல், விதையில் குத்தலுடன் வலி, குறியில் அழற்சி மிகுந்து கருத்தல் ஏற்படும்.

உடற்கூறியல் -14 (நரம்பு மண்டலம் - Nervous System)

        மூளை, மூளையின் முள்ளந்தண்டுக் கொடி, அவைகளின் நரம்புகள் ஆகியவை சேர்ந்த தொகுதி நரம்பு மண்டலம் எனப்படும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் என 3 பகுதிகள் உண்டு. இதே போல மூளையை பாதுகாக்க 3 வித சவ்வுகள் பாதுகாக்கிறது. இவை மூளையை அதிர்ச்சியில் இருந்தும், அதிர்வில் இருந்தும் பாதுகாக்கும்.

மேல்ச் சவ்வு (Dura Mater) : மூளையின் மேல்பகுதியில் மெல்லிய படலம் ஒன்று உண்டு. இது முள்ளந்தண்டுக் கொடியின் துவாரத்தில் இறங்கி முள்ளந்தண்டுக் கொடியைச் சுற்றி இருக்கும்.

நடுச் சவ்வு (Arachnoid Membrane) : இது மேன்சொன்ன சவ்வுக்கு அடுத்ததாக இருக்கும். இது சிலந்திக் கூடுபோல வளைபோல இருக்கும்.

அடிச் சவ்வு (Pia Mater) : இது மூளையை ஒட்டி மற்ற இரண்டு சவ்வுப் பகுதிக்கு அடுத்ததாக இருக்கும். இது இரத்த நரம்புகளால் உண்டாகி மூளையைச் சுற்றிக் கொண்டு பிறகு முள்ளந்தண்டுக் கொடிக்கு இறங்கும்.
பெருமூளை (Cerebrum) : மேற்புறமாய் இருக்கும் இது மூளையின் மிகப்பெரிய பாகமாகும். இதன் மேல்பகுதி சுருண்டிருக்கும். இது மூளைச்சுருள்கள் (Convolutions) எனப் பெயர்படும். இது மூளையை இரு அரைக்கோளங்களாக (Cerebral Hemispheres) பிரிக்கறது. இந்த இரண்டு அரைக்கோளங்களுக்கும் இடையில் வெண்ணிற பொருள் உண்டு. இந்த அரைக்கோளத்துக்கு அடியில் மூன்று மேடுகள் (Lobes) இருக்கும். உடலில் நிகழும் சகல தன்னிச்சைச் செயல்களும் இதன்  உதவியுடன் நிகழ்த்தப்படுகிறன.
சிறுமூளை (Cerebellum) : பெருமூளைக்கு இது 7 பங்கு சிறிதாகவும், அதன் பின்பகுதியின் அடிப்பகுதியில் உள்ளது. இதுவும் இரண்டாகப் பிளந்திருக்கும். நெடுக அறுத்துப் பார்க்கக் கிளைகளுடைய செடியைபோலக் காணப்படும். இது பிராண விருட்சம் (Arbor Vitae Cerebelli) எனப்படும்.
முகுளம் (Medulla Oblongata) : இது முள்ளந்தண்டுக் கொடியின் சிகரம் ஆகும். இது 1 அங்குலம் நீண்டும், மொக்கு போலவும், நீண்ட ரேகைகளும் இருக்கும். இது பிடரி எலும்பில் இருக்கிற பிதுக்கத்தின் மேல் அமைந்திருக்கும்.
முள்ளந்தண்டுக் கொடி (Spinal Cord) : இது மூளையில் தொடங்கி கபால மூலத்துவாரத்தின் வழியாக வெளிப்பட்டு முள்ளந்தண்டுக் குழலில் அமைந்திருக்கும். இது வெள்ளை நிறமாயும், 18 அங்குல நீளமும் கைவிரல் பருமனும் கொண்டிருக்கும். மூளையின் 3 சவ்வுகளும் இதைச் சுற்றிக் கொண்டு இருக்கும். இந்தக் கொடியின் மேல் முன்னும் பின்னும் நீண்ட ரேகை ஒன்று காணப்படும். முள்ளந்தண்டுக் கொடியின் முனையானது, சல்லிவேர்களைப் போலச் சிலும்பலாய், அநேக நரம்புகளாகப் பிரிந்திருக்கும். இதைக்  குதிரை வால் (Cauda Eqina) என அழைக்கப்படும்.

சிரசு நரம்புகள் (Cranial Nerves) :
        நமது உடலில் மூன்று விதமான நரம்புகள் உள்ளது. அவை கண், மூக்கு, செவி, நாக்கு, மெய் என்னும் பஞ்ச இந்திரியங்களின் தொழிலான ஒளி, நாற்றம், ஒலி, சுவை, தொடுதல் என்ற செயல்களுக்குக் காரணமான இந்திரிய நரம்புகள் (Nerves Special of Sence), சதைகளை மனதுக்கு ஏற்பச் செயல்படுத்தும் இயக்க நரம்புகள் (Nerves of Motion), உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தும் ஒற்றுணர்வுள்ள நரம்புகள் (Sympathetic Nerves). மூளையிலிருந்து 9 நரம்புகள் பிறக்கிறது. அவை,

1) வாசனை நரம்பு (Olfactory Nerve) : இது மூளையிலிருந்து தோன்றி முன்புறமாக நாசியின்மேல் வந்து அநேக கிளையாகப் பிரியும். அக்கிளைகள் சல்லடைக் கண்களின் வழியாகச் சென்று சளி ஊறும் சவ்வின் மேல் வியாபித்துவிடும்.

2) பார்வை நரம்பு (Optic Nerve) : இது மூளையிலிருந்து தோன்றி முன்னுக்கு வந்து சதுக எலும்பின் மேல் வலது நரம்பு இடது புறமாகவும், இடது நரம்பு வலது புறமாகவும் மாறி நேத்திர நரம்புத் துவாரம் வழியாக நேத்திரக் குழிக்குள் சென்று விழிக்குள் சென்று மலர்ந்துவிடும். மலர்ந்த சவ்வுக்கு ரூப உற்பத்தி சவ்வு (Retina) என்று பெயர்.

3) மோடோரஸ் ஆகியுலோகம் (Motores Oculorum) : இது மூளையிலிருந்து தோன்றி, முன்னுக்கு வந்து கண்குழிக்குள் பிரவேசித்து கண்சதைகளில் பரவிவிடும்.

4) பெதிடிசை (Pathetici) : இதுவும் மேற்படி நரம்புகளைப் போலவே நேத்திர நரம்புத் துவாரம் வழியாகச் சென்று கண் சதைகளில் பரவிவிடும்.

5) டிரைபேஷியல் (Trifacial) : இது சிரசு நரம்புகளுக்குள் பெரியது. மூன்று கிளையாகப் பிரியும்.
  • அப்தால்மிக் (Opthalmic) : இது மேற்படி நரம்பிலிருந்து தோன்றி முன்புறத்தில் கண்குழியின் வழியாக வந்து புருவத்தின் உள்முனை மார்க்கமாக நெற்றிக்கு ஏறிப் பரவிவிடுகிறது. இதன் கிளைகள் கண், மூக்கு, முகம், நெற்றி, கண்ணீர் சுரப்பி ஆகிய இவைகளுக்கு போய்ப் பரவும்.
  • சுபீரியர் மாக்சிலரி (Superior Maxillary) : இது மேற்படி நரம்பிலிருந்து தோன்றி கண்குழிக்கு அடியில் இருக்கும் நீண்ட துவாரம் வழியாகச் சென்று முகத்துக்கு வந்து மேல்வாய் பற்கள், அண்ணம், கண்கீழ்ரெப்பை, கன்னம், மேலுதடு ஆகிய உறுப்புகளுக்குச் சென்று வியாபிக்கும்.
  • இன்பீரியர் மாக்சிலரி (Inferior Maxillary) : இதுவும் மேற்படி நரம்பிலிருந்து தோன்றி கீழ்வாய்ப் பற்கள், ஈறு, நாக்கு, காது, முகம், கீழுதடு, மெல்லும் சதைகள் ஆகிய உறுப்புகளுக்குச் சென்று பரவுகிறது.
6) அப்டியுசென்டல் (Abducentes) : இந்த நரம்புக் கண் சதைகளுக்கு சென்று பரவும்.

7) இதில் இரண்டு நரம்புகள் உண்டு. அவை போர்டியோ டியுரோ, போர்டியோ மொலிஸ்.

போர்டியோ டியுரோ (Portio Dura) : இது காதின் உள்துவாரத்தில் உள்ளே சென்று கேநார எலும்பில் உள்ள துவாரத்தின் வழியே சென்று முகத்துக்குச் சென்று பரவும்.

போர்டியோ மொலிஸ் (Portio Mollis) : இது காதுகளுக்குச் சென்று அநேக இழைகளாகப் பிரிந்து அவ்விடத்தில் காதறைக்குள் இருக்கும் நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும்.

8) இதில் மூன்று நரம்புகள் உண்டு. அவை கிளாஸோ பெரிஞ்சியல், நியுமொகாஸ்ட்ரிக், ஸ்பைனால் அக்செஸ்சொரி.
  • கிளாஸோ பெரிஞ்சியல் (Glosso Pharyngeal) : இது உள்கதகண்ட நாளத்தின் வழியாக வெளியே வந்து நாக்கு, தொண்டை இவைகளில் வியாபிக்கும்.
  • நியுமொகாஸ்ட்ரிக் (Pneumogastric) : இது மேற்படி துவாரத்தின் வழியாக வெளி வந்து கண்ட நாடி, கண்ட நாளம் இவைகளோடு இணைந்து நெஞ்சறைக்கு இறங்கி, குரல்வளை, சுவாசக் குழல், புப்புசம், தொண்டை, திணிப்பை, இருதயம் ஆகிய உறுப்புகளுக்குச் சென்று வியாபிக்கும்.
  • ஸ்பைனால் அக்செஸ்சொரி (Spinal Accessory) : இது பிடரிச் சதைகளின் வழியாகப் போய் வியாபிக்கும்.
9) ஹைபோகிளாஸல் (Hypoglossal) : இது நாக்குச் சதைகள் யாவற்றிலும் போய் வியாபிக்கும்.

முள்ளந்தண்டுக் கொடியின் நரம்புகள் (Spinal Nerves) :
முள்ளந்தண்டுக் கொடியிலிருந்து நரம்புகள் 31 தோன்றுகிறது. இதை 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
  • கழுத்து நரம்புகள் (Cervical Nerves) - 8
  • முதுகு நரம்புகள் (Dorsal Nerves) - 12
  • இடுப்பு நரம்புகள் (Lumbar Nerves) - 5
  • பீடிகை நரம்புகள் (Sacral Nerves) - 5
  • புச்ச நரம்புகள் (Coccygeal Nerves) - 1
அக்குள் நரம்புக் கூடம் (Brachial / Axillary Plexus) : இது அக்குளில் அமைந்து இருக்கும். இதிலிருந்து ஒரு பெரிய நரம்பு தோன்றி புஜ நாடியோடு இணையும். அதற்கு மத்திய நரம்பு (Median Nerve) என்று பெயர். முழங்கையின் உட்குழியின் மேல் ஒரு சிறிய நரம்பு (Ulnar Nerve) ஓடும்.

முதுகு நரம்பு (Dorsal Nerve) : இதன் 12 நரம்புகளும், முதுகுச் சதைகளுக்கும், பழுவெலும்புச் சதைகளுக்கும், தோலுக்கும் சென்று வியாபிக்கும்.

இடுப்பு நரம்புகள் (Lumbar Nerve) : இதன் 5 நரம்புகளும், அடிவயிற்றுச் சதைகள், தோல், தொடை, பீஜகவசம் ஆகிய உறுப்புகளுக்குப் சென்று வியாபிக்கும்.

பீடிகை நரம்புகள் (Sacral Nerve) : இதன் 5 நரம்புகளும், பிட்டம், மூத்திரப்பை, யோனி, ஆசனம், ஆண்குறி, பீஜகவசம், தொடை, முழங்கால், கெண்டைச் சதை, பாதம் ஆகிய உறுப்புகளுக்குச் சென்று வியாபிக்கும். இந்த நரம்புக் கூட்டத்திலிருந்து ஒரு பெரிய நரம்பு (Great Ischiatic Nerve) தோன்றி, தொடையின் பின்புறமாகக் கீழிறங்கும். உட்காரும்போது இதன் மீது அழுத்தம் அதிகரித்தால் காலில் திமிர் காணும்.

ஒற்றுணர்வுள்ள நரம்புகள் (Sympathetic Nerve) : இவை முள்ளந்தண்டின் இரண்டு புறத்திலும் மணிக்கோவை போலச் சிரசிலிருந்து ஆசனம்வரை நீண்டு சரீர நரம்புகளோடு இணைந்திருக்கும். இதன் பிரதான இடம் இரைப்பைக்கு பின்புறம் ஆகும்.

புதன், 29 ஜூலை, 2020

உடற்கூறியல் -13 (நாடிகள், நாளங்கள் மற்றும் நிண நரம்புகள் - Phlebograph and Lymphatic Vessels)


நாடிகள் (Arteries) :

        இருதயத்திலிருந்து இரத்தத்தை உடல் முழுதும் கொண்டு போகிற உருண்ட குழல்களுக்கு, நாடிகள் என்று பெயர். நமது உடலில் மொத்தமாக 72000 நாடிகள் இருக்கிறது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் உள்ள நாடிகளின் எண்ணிக்கையானது பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.

நாடி இருப்பிடம்

தொகை

தலையில்

15000

கண்களில்

4000

செவியில்

3300

மூக்கில்

3380

பிடரியில்

6000

கண்டத்தில்

5000

கைகளில்

3000

முண்டத்தில்

2170

இடுப்பில்

8000

விரல்களில்

3000

லிங்கத்தில்

7000

மூலத்தில்

5000

சந்துகளில்

2000

பாதத்தில்

5150

மொத்தம்

72000

நமது உடலில் மொத்தமுள்ள 72000 நாடிகளில் முக்கியமான நாடிகள் பத்து. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

  1. வலது கால் பெருவிரலிருந்து கத்திரிக்கோல் மாறலாக இடது மூக்கைப் பற்றி நிற்பதான இடகலை
  2. இடது கால் பெருவிரலிலிருந்து கத்திரிக்கோல் மாறலாக வலது மூக்கைப் பற்றி நிற்பதான பிங்கலை
  3. மூலாதாரம் தொடங்கி எல்லா நரம்புகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாய் உச்சி துவாரம் வரைக்கும் இருக்கும் சுழுமுனை
  4. கண்ணில் நிற்பதாகிய காந்தாரியும்
  5. உடலெங்கும் நிற்பதாகிய அத்தியும்
  6. உண்ணாக்கில் நின்று சோறு, தண்ணீர் இவைகளை விழுங்கச் செய்யும் சிங்குவை
  7. செவியளவாய் நிற்பதாகிய அலம்புடை
  8. பாதத்தில் நிற்பதாகிய புருடன்
  9. மார்பில் நிற்பதாகிய சங்கினி
  10. குறி குதத்தில் நிற்பதாகிய குரு

நாளங்கள் (Veins) :

        நாடிகளிலிருந்து தந்துகிகள் எனப்படும் மிகச்சிறிய குழாய்களின் வழியே உடல் முழுதும் பரவிக் கறுத்துக் கேட்ட இரத்தத்தை மறுபடியும் இதயத்தின் வலது பக்கத்திற்கு கொண்டுபோகும் குழல்களுக்கு நாளங்கள் என்று பெயர். இந்த நாளங்களில் மிகமுக்கியமான சில நாளங்களின் பெயர் மற்றும் அவற்றின் இருப்பிடம் ஆகியவற்றைக் காண்போம்.

  1. நெற்றி நாளம் (Facial Vein) : நெற்றியின் மத்தியில் இருக்கும் இரண்டு நாளங்கள் அங்கிருந்து கீழிறங்கி உள்கதகண்ட நாளத்துடன் இணையும்.
  2. சிரோ நாளங்கள் (Sinuses) : சிரசின் உள்பகுதியில் இருக்கு சவ்விலிருந்து பிரியும் இந்த நாளங்கள் வழியே மூளையில் உள்ள கேட்ட இரத்தமானது உள்கதகண்ட நாளங்களுக்குச் செல்லும்.
  3. வெளிக்கதகண்ட நாளம் (External Jugular Vein) : இவை கழுத்தில் மூலைவாட்டமாய் மேலிருந்து கீழிறங்கி தோள் நாளங்களோடு இணையும்.
  4. முன்புறகதகண்ட நாளம் (Anterior Jugular Vein) : இது கழுத்தின் மத்தியிலிருந்து கீழிறங்கும்.
  5. உள்கதகண்ட நாளம் (External Jugular Vein) : இவை வலது, இடது பக்கங்களிலிருந்து கண்ட நாடிகளோடு தொடர்ந்து கீழிறங்கி தோள் நாளங்களோடு இணையும்.
  6. உள்கதபுஜ நாளம் (Basilic Vein) : இது புஜத்தின் உள்புறமாய் மேலேறி கைமூல நாளமாகிறது.
  7. வெளிக்கதபுஜ நாளம் (Cephalic Vein) : இது புஜத்தின் வெளிப்புறமாய் மேலேறி கைமூல நாளத்துடன் இணையும்.
  8. கைமத்திய நாளம் (Median Vein) : இது உள்ளங்கையில் இருக்கும் இரத்தத்தை எடுத்துக் கொண்டு மணிக்கட்டில் தொடங்கி முன்னங்கையின் நடுப்பகுதி மேலேறி முழங்கை பகுதியில் இரண்டாகப் பிரியும். இதில் ஒருகிளை உள்கதபுஜ நாளத்துடனும் மற்றொரு கிளை வெளிக்கதபுஜ நாளத்துடனும் இணையும்.
  9. அக்குள் நாளம் (Axillary Vein) : இது அக்குள் நாடிக்கு உள்புறமாய் ஓடுகிறது.
  10. தோள் நாளம் (Sub-Clavian Vein) : இது தோளில் முதல் பளு எலும்பிற்கு மேல் அமைந்திருக்கும்.
  11. முழங்கால் மடிப்பு நாளம் (Popliteil Vein) : இது முழங்கால் மடிப்பு ஸ்தானத்தில் அமைந்திருக்கும்.
  12. தொடை நாளம் (Femoral Vein) : இது தொடையில் உள்பக்கத்தில் இருக்கும். மேலும் இது தொடையிலிருந்து மேலேறி வயிற்றுக்குள் சென்று மறையும்.
  13. பின்னங்கால் நாளம் (External Saphenous Vein) : இது பாதத்தின் வெளி ஓரத்திலிருந்து கணுக்கால் வெளிமுழிக்கு பின்னாகச் சென்று பின்னங்கால் மத்தியில் மேலேறி முழங்கால் மடிப்பு நாளத்துடன் இணையும்.
  14. கால் உள் நாளம் (Internal Saphenous Vein) : இது கால் பெருவிரலில் தொடங்கி கணுக்கால், உள்முழி வழியாக மேலேறி தொடை நாளத்துடன் இணையும்.
  15. மேல்பிரகன் நாளம் (Superior Vena Cava) : உள்கதகண்ட நாளங்கள் இரண்டும் சேர்ந்து உண்டாகி, இதயத்தின் வலது சிரவத்தின் மேல்பக்கமாய் முடிகிறது. இது 3 அங்குல நீளம் கொண்டது. இது இதயத்தின் மேல் பக்கமாய் இருக்கும், தலை, கண்டம், கை முதலியவற்றில் இருக்கும் கெட்ட இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வரும்.
  16. கீழ்பிரகன் நாளம் (Inferior Vena Cava) : இது இதயத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கால், குடல், சீரண உறுப்புகள், மூத்திரக்குண்டிக்காய், பீஜம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் கேட்ட இரத்தத்தை இதயத்திற்கு வலது சிரவத்திற்கு கொண்டு வரும்.
  17. புப்புச நாளங்கள் (Pulmonary Veins) : நமது உடலில் 4 புப்புச நாளங்கள் உள்ளது. இவற்றில் 2 நாளங்கள் வலது புறத்தில் இருந்தும், 2 நாளங்கள் இடது புறத்தில் இருந்தும் சென்று இதயத்தின் இடது சிரவத்தில் முடியும். இவை சுவாசப்பையில் உள்ள சுத்த இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருகிறது.
நிண நரம்புகள் (Lympathic Vessels) :

        நமது உடலில் உள்ள கேட்ட நீரை கிரகித்து நாளங்களுக்குக் கொண்டு செல்லும் குழல்களுக்கு நிண நரம்புகள் என்று பெயர். சிறுகுடலில் இருக்கும் அன்னரசத்தை கிரகித்து இரத்தத்திற்கு கொண்டு செல்லும் குழாய்களுக்கு ரசாயனிகள் (Lacteals) என்று பெயர். இவை கண்ணிற்கு தெரியாத அளவிற்கு மிகச்சிறிய அளவிலிருந்து பிறகு ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெருத்து முடிவில் ஒரே குழாயாகிவிடுகிறது. மூளை தவிர உடலின் மற்ற பாகங்களில் இந்த நிண நரம்புகள் வியாபித்து இருக்கும். இந்த நிண நரம்புகள் சோஷண குழல்கள் என்றும் அழைக்கப்படும்.

        இந்த நிண நரம்புகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கட்டிகளுக்குச் சோஷண கிரந்திகள் (Lymphatic Glands) எனப்படும். இவை கழுத்திலும், அக்குள், கால் சந்து மற்றும் குடல் பகுதிகளில் அதிகம் காணப்படும். நமது உடலிற்கு சக்தியளிக்கும் அன்ன ரசம் குறையும்போது இவை உடலில் உள்ள கொழுப்பைக் கிரகித்து உடலுக்குச் சக்தியளிக்கும். உடலில் கொழுப்பு குறையும்போது தேகம் இளைத்து வீங்கி வேதனை செய்யும்.

ரசதாரை (Thoracic Duct) : சிறுகுடலில் இருக்கும் நிண நரம்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து முடிவில் ஒரே குழலாகும். இதற்கு ரசதாரை என்று பெயர். இது முள்ளந்தண்டின் மத்தியின் வழியாக மேலேறி இடது தோள் நாளத்துடன் சேர்ந்துவிடும். அன்னரசம் இந்த ரசதாரை வழியாகத் தான் உடல் முழுவதும் பரவுகிறது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

உடற்கூறியல் -12 (தசையியல் - Myology)

            நமது உடலில் உள்ள சிவந்த தசையானது அடுக்கடுக்காக அமைந்திருக்கும். இவற்றில் சில அகலமாகவும், சில நீண்டும் இருக்கும்.இந்தத் தசையானது தசை இழைகளையும், தசையையும் ஒன்றோடு ஒன்று இணையும் படிக்கு வலை போன்ற சவ்வால் (Cellular Tissue) இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். எலும்புகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தசைகள் வெளுத்து, பலரூபங்களில் இருக்கும். இவற்றில் சில நரம்புகள்போல நீண்டும், மற்றும் சில அகலமாகவும் இருக்கும். இவை தசைநார்கள் (Tendon) எனப்படும். நமது உடலில் மொத்தமாகச் சுமார் 4126 தசைகள் உள்ளது.


            நமது உடலில் இரண்டு வகையான தசைகள் உள்ளது. அவை மனதின் இயக்கத்திற்கு ஏற்ப இயங்கு தசைகள் (Voluntary Muscles) என்றும், மனதின் இயக்கத்திற்கு இயங்காமல் வலிந்து நாமே இயக்கு தசைகள் (Involuntary Muscles) என்றும் அழைக்கப்படும். புஜம், சுவாசப்பாதை, உணவுப்பாதை, பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தசைகள் மனதின் இயக்கத்திற்கு ஏற்ப இயங்கும் தசைகளுக்கு உதாரணமாகும். நாமே வலிந்து இயக்கும் தசைகளுக்கு உதாரணமாக அடிவயிற்று தசைகள், நடுக்காது தசைகள், உதரவிதானம், உடலின் மற்ற பகுதியில் உள்ள தசைகள் போன்றவற்றை கூறலாம்.

            பொதுவாக இந்தத் தசைகளின் இயக்கம் மற்றும் இவற்றின் இருப்பிடம் ஆகியவற்றை வைத்துக் கீழே கொடுக்கப்பட்டது போல இவைகளை வகைப்படுத்தலாம். பதிவின் விரிவு கருதி இங்குத் தசைகளின் பெயர்கள் மட்டும் கொடுக்கப்பட்டது.

இருப்பிடம்

வகைகள்

உட்பிரிவுகள்

 

 

 

 

 

 

 

தலையிலும் முகத்திலும் உள்ள தசைகள்

கபால தசை

பிடர் நுதலி

செவித்தசை

மேல்சோத்திரி, முன்சோத்திரி, பின்சோத்திரி

இமை தசை

நிமீலனி, புரூரி, இமை இறுக்கி

கண்குழி தசை

இமை ஏற்றி, மேல் நயனி, கீழ் நயனி, அக நயனி, புற நயனி, கபி நயனி, சாய் நயனி

நாசித் தசை

நாசிச்சிகரி, நாசியோட்டம் ஏற்றி, பின்நாசிப் பட்சகி, முன்நாசிப் பட்சகி, நாசிப் பிரசாரி, நாசிச்சிறு பிரசாரி, நாசி இறக்கி

மேல்தாடை தசை

ஓட்டமேற்றி, சிருக்கமேற்றி, பெருயுக சிருக்கி, சிருயுக சிருக்கி

கீழ்த்தாடை தசை

அதரம் ஏற்றி, அதரம் இறக்கி, சிருக்கம் இறக்கி

தாடையிடை தசை

தமனி, முறுவலி, லபனி

கேநாரதாடை தசை

சருவணி, கேநாரி

பாதவதாடை தசை

புறப்பாதவி, அகப்பாதவி

 

 

 

 

 

கழுத்துத் தசைகள்

கழுத்து வெளித் தசை

கண்ட விஸ்தரி, வட்ச சூசகி

தனு கீழ்த்தசை

தனுவட்சி, வீதன வச்சி, தனு வீதனி, தனுவாகி

தனுமேல் தசைகள்

இருபீனி, தனுலேகி, தனுகுஞ்சி, தனுசிம்பி

நாக்குத் தசைகள்

சம்பதனு சிகுவி, தனு சிகுவி, சிகுவி, சிகுவலேகி, தாலுசிகுவி

தொண்டைத் தசைகள்

கீழ்ச்சம்வாரி, நடுச்சம்வாரி, மேல்சம்வாரி, நிகரணலேகி, தாலுநிகரணி

தாலுத் தசைகள்

தாலு ஏற்றி, தாலு இறக்கி, நாவனி, தாலுசிகுவி, தாலு நிகரணி

கசெருமுன் முன்தசைகள்

முன்பெருஞ்சரளி, முன்சிறுசரளி, பக்கச்சரளி, கண்டநீளி

கசேரு பக்கத் தசைகள்

முன்பழுக்கந்தரி, நடுப்பழுக்கந்தரி, பின்பழுக்கந்தரி

குரல்வளைத் தசைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நடுஉடல் தசைகள்

 

 

 

 

 

 

 

 

முதுகுத் தசைகள்

 1வது அடுக்கு

கும்பி, வென்பிரசாரி

2வது அடுக்கு

வாகேற்றி, பெருஞ்சாசிவி, சிருசாவிசி

3வது அடுக்கு

வென்மேல் தந்துரி, வென்கீழ் தந்துரி, தலையுபதானி, கழுத்துபதானி,

4வது அடுக்கு

கசேரு நிமிர்த்தி

5வது அடுக்கு

வென்ப்பாதிக் கசேரி, கழுத்துப்ப்பாதிக் கசேரி, சமூகி, கசேருதிருகி, முண்ணீளி, முண்ணடுவி, புச்சநீட்டி, குறுக்குநடுவி, பின்பெருஞ்சரளி, பின்சிறுசரளி, மேல்சாயி, கீழ்சாயி

முதுகில்

பீடிகைப் பர்சுவி, உபபீடிகைப் பர்சுவி, வென்நீளி, வென்முள்ளி

கழுத்தில்

கண்டம் ஏற்றி, குறுக்குக் கந்தாரி, கிரீவசூசுகி, சங்கீரணி, பிடரி ரூபினி, கழுத்துமுள்ளி

வயிற்றுத் தசைகள்

வெளிச்சாயுதரி, உள்ச்சாயுதரி, பீஜம் ஏற்றி, குறுக்குதரி, உதரநீளி, உதரசிகரி, கடிசதுரி

நெஞ்சுத் தசைகள்

வெளிப்பழுநடுவி, உள்பழுவி, உள்பழுநடுவி, உள்வட்சி, பழுவேற்றி

 

 

விடபத் தசைகள்

ஆண் விடபம்

அமுரி ஓட்டி, சிசின நிமிர்த்தி, குறுக்கு விடபி, மிகனி அமுக்கி, பாயுச்சுருக்கி, பாயு ஏற்றி, புச்சி, புச்சம் அடக்கி

பெண் விடபம்

யோனி சுருக்கி, சுமரி நிமிர்த்தி, குறுக்குவிடபி, மிகனி அமுக்கி, பாயுச் சுருக்கி, பாயு ஏற்றி, புச்சி, புச்சம் அடக்கி

 

 

 

 

 

 

 

 

 

 

 

உற்காய தசைகள்

மார்புத் தசைகள்

பெருவட்சி, சிருவட்சி, செந்தூரீ

பாரிச தசை

பெருந்தந்துரி

தோள்த் தசை

கீசகி

வாகுமுன் தசை

வாகுமேவி

வாகுபின் தசைகள்

மேல் புருவி, கீழ் புருவி, சிருவடவி, பெருவடவி

புயமேல் தசைகள்

கணைத் தசை, இருமூலி, முன்புசி

புயபின் தசைகள்

மும்மூலி, உபகூபரி

 

 

முன்கை முன் தசைகள்

வெளி அடுக்கு

சாய்புரட்டி, ஆரைக்குளசு மடக்கி, அங்கை நீளி, இரத்தினி குளசு மடக்கி, விரல் வெளி மடக்கி

உள் அடுக்கு

விரல் உள்மடக்கி, அங்குட்ட நெடு மடக்கி, சதுரப் புரட்டி

ஆரை தசைகள்

நெடுநிமிர்த்தி, நெடும் ஆரைக் குளசு மடக்கி, குறும் ஆரைக் குளசு மடக்கி

 

 

முன்கை பின் தசைகள்

வெளி அடுக்கு

விரல் பொது நீட்டி, கனிட்ட நீட்டி, இரத்தினி குளசு நீட்டி, கூபரி

உள் அடுக்கு

குறு நிமிர்த்தி, அங்குட்ட கரப நீட்டி, அங்குட்ட நடுநீட்டி, அங்குட்ட நுனி நீட்டி, தற்சனி நீட்டி

 

 

உள்ளங்கை தசைகள்

அங்குட்டம்

அங்குட்ட பேதனி, அங்குட்ட கரப மடக்கி, அங்குட்ட குறு மடக்கி, அங்குட்ட யோகி

கனிட்டம்

அங்கைக் குரளி, கனிட்ட பேதனி, கனிட்ட குறுமடக்கி, கனிட்ட கரப மடக்கி

அங்கை நடு

குசூவி, முன்கரபி, பின்கரபி

 

 

 

 

 

 

 

 

 

அதக்காயத் தசைகள்

 

இடுப்பின் முன் தசைகள்

பேர்கடிசி

அஞ்சீரவி, மேலுகளி, உள்குந்தகி, கீழுகளி, வெளிக்குந்தகி, சதுரவாமி

சிறுகடிசி

பாலிகி

முன்தொடை தசைகள்

தொடயுறை இறுக்கி, சப்பணி, தொடைச்சரளி, புறவிசாலி, அகவிசாலி, வாமி, உபவாமி

பின்தொடை தசைகள்

இருமூலி, நசார்த்தி, சில்லிகார்த்தி

காலின் முன் தசைகள்

முன் நளகி, விரல் நெடுநீட்டி, அங்குட்ட நீட்டி, முன்சரி

அகத்தொடை தசைகள

லதாவி, மேகனி, நெடும் யோகி, குறும் யோகி, பெரும் யோகி

காலின் பின் தசைகள்

வெளி அடுக்கு

பிற்சரணி, சபரி, நுவணி

உள் அடுக்கு

மந்திரி, அங்குட்ட நெடு மடக்கி, விரல் நெடு மடக்கி, பின்நளகி

குண்டித் தசைகள

பெருஞ்சகனி, நடுச்சகனி, சிறுச்சகனி

காலின் புறத் தசைகள்

நெடுஞ்சரி, குருஞ்சரி

பதைமேல் தசைகள்

விரல் குறு நீட்டி, மேல்புற குற்பிகள்

உள்ளங்கால் தசைகள்

 1வது அடுக்கு

அங்குட்ட பேதனி, விரல் குறுமடக்கி, கனிட்ட பேதனி

2வது அடுக்கு

உபமடக்கி, குசூவிகள்

3வது அடுக்கு

அங்குட்ட மடக்கி, அங்குட்ட யோகி, கனிட்ட குறுமடக்கி, குறுக்குத்தலி

4வது அடுக்கு

கீழ்ப்புற குற்பிகள், மேல்புற குற்பிகள்