புதன், 4 டிசம்பர், 2019

மருந்து செய்ய பயன்படும் கருவிகள்


1) கல்வம்:

கருங்கல்லினால் குழி பரவலாகச் செய்யப்பட்ட குழி அம்மியின் அளவானது 30 விரற்கடை அகலம், 40 விரற்கடை அகலம், விளிம்பு 2 விரற்கடையும், ஆழம் 2 விரற்கடை அளவும், இருபுறமும் மூக்கு நீண்டபடி இருக்க வேண்டும். அதே போலக் குளவியானது 16 விரற்கடை நீளமும், கைப்பிடி 4 விரற்கடை அளவும், அரைக்கும் பகுதி 10 விரற்கடை அளவும் இருக்க வேண்டும்.

2) மரக்கரண்டிகள்:

வேம்பு, மா, நுணா, வேங்கை போன்ற மரங்களால் செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய அகப்பைகள்.

3) அகல்:

களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய அகல்கள்.

4) குப்பி, குடுவை:

மரம், உலோகம், கண்ணாடி போன்றவற்றால் செய்யப்பட்ட குப்பி, குடுவைகள் மற்றும் அவற்றுக்கான அடைப்பான்கள் போன்றவை மருந்துப் பொடிகள், தைலங்கள், லேகியங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கப் பயன்படும்.

5) சலாகை:

புண், புரை, கட்டி போன்றவற்றை அறுத்து மருந்திட்டு குணப்படுத்த பயன்படுகிறது.

6) சட்டிகள்:

மண், இரும்பு, செம்பு போன்றவற்றால் செய்யப்பட்டவை. இவை மருந்துகளின் செய்முறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

7) மூசைகள்:

குகை, களிமண், அரக்கு, முட்டை வெண்கரு, மூலிகைச்சாறு, சுக்கான்கல், தேங்காய் நாறு, இரும்புத் தூள், பாடணம், சணல், காந்தப் பொடி, இளநீர் போன்றவற்றால் செய்யப்படும் மூசைகள் உலோகம், பாடாணம் போன்றவற்றை உருக்கிச் சாய்க்க பயன்படுகிறது.

8) சீலை:

வெண்மை மற்றும் கருமை நிற துணிகளைத் தூய களப்பற்ற களிமண் கலந்த நீரில் நனைத்து புடமிடும் சட்டிகள், குப்பிகள், அகல் போன்றவற்றின் வாய் பகுதியில் மேல்மூடியிட்டு கவசம் செய்யப் பயன்படும். இதனால் அந்தப் பாத்திரங்களினுள்ளே காற்று புகுவது தடுக்கப்படுகிறது.

9) வறட்டிகள்:

காடுகளில் தாவரங்களை மேயும் மாடுகளின் சாணத்தால் அளவாகத் தட்டி காயவைத்து எடுக்கப்பட்டவை. வறட்டிகளின் எடை இரண்டு பலம் (60 கிராம்), அகலம் 8 முதல் 12 அங்குலம், ஒரு விரல் கனமும் இருக்க வேண்டும்.

10) அம்மி:


கருங்கலல்லால் செய்யப்பட்ட அம்மியின் அகலம் 1 அடி, நீளம் 2 அடி மற்றும் உயரம் 1 அடியும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற குளவியும் இருக்க வேண்டும்.

11) அவி இயந்திரம்:

ஒரு பாண்டத்தில் நீர், பால் அல்லது மூலிகை சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விட்டுப் பாத்திரத்தின் வாயை மெல்லிய சீலையால் கட்டி அதன்மீது பிட்டவியல் செய்ய வேண்டிய பொருளைக் குவித்து மேல் சட்டி மூடி உள்ளே உள்ள ஆவி வெளியேறாதபடி சீலை செய்து சிறு தீயாக எரிக்க வேண்டும்.

12) தோலா இயந்திரம்:

ஒரு மண் பாத்திரத்தில் நீர், பால், மூலிகை சாறு முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை விட்டுப் பொருத்தமான மேல்மூடியின் மத்தியில் சிறுதுவாரம் உண்டாக்கி அதன் வழியாகக் கயிற்றைச் செலுத்தி சரக்கைத் தேவைக்கேற்ப திரவத்தில் மூழ்கி இருக்கும்படியோ அல்லதி ஆவிபடும்படியோ வைத்துக் கட்ட வேண்டும். கயிற்றின் மறுமுனை பாத்திரத்தின் உள்ளே விழாதபடி இருக்க சற்று பெரிய முடிச்சோ அல்லது சிறிய குச்சியோ வைத்துக் கட்ட வேண்டும்.

கிழி கட்டி எரிக்கும் முறையாவது சரக்கைச் சுத்தமான துணியில் வைத்துக் கட்டி மேற்கூறியபடி எரிப்பதாகும்.

13) தூப இயந்திரம்:

ஒரு மண்பாத்திரத்தில் தூபத்திற்காகக் கூறப்பட்ட சரக்கையிட்டு, வாய்க்கு மெல்லிய சீலைகட்டி, அதன் மத்தியில் சூரணத்தை வைத்து மேல்சட்டி மூடிச் சீலைசெய்து சிறுதீயால் எரிக்க அடிப்பாண்டத்திலிட்ட சரக்கு புகைந்து மேலெழும்பி சூரணத்தோடு கலக்கும். இந்த இயந்திரத்தின் வடிவமைப்பு அவி இயந்திரத்தின் வடிவத்தை முழுதும் ஒத்திருக்கும்.

14) மெழுகு தைலக்கருவி:

ஒரு நீண்ட கழுத்துள்ள பெரிய மண்கலத்தில் (கொள்ளளவு - 10 லிட்டர்) தைலச் சரக்குகளை வைத்து, அதன் வாய்க்குப் பொருத்தமான வாய் உள்ளதும் முன்னதன் அளவுக்கு நான்கில் ஒருபங்குள்ளதுமான (கொள்ளளவு - 2.5 லிட்டர்) மற்றொரு கலத்தைக் கவிழ்த்து, பொருந்துவாய்க்கு மண்பூசி, நூலினால் இரண்டு கலங்களின் வாயைச் சேர்த்து கட்டிய பின் அதன்மீது ஏழு சீலைமண் செய்ய வேண்டும்.

இவ்விரண்டு கலங்களின் நடுஇடங்களில் பெரிய கலத்தின் மேல்புறத்தில் சுண்டுவிரல் நுழையத் தக்க துவாரமும்,  சிறிய கலத்தின் கீழ்முறத்தில் உளுந்து நுழையும் அளவுக்கு மூன்று சிறிய துவாரங்களும் நெருங்கச் செய்து, பெரிய கலத்தின் மேற்புறத்தின் வழியாகப் புகை வெளியாகதிருக்க அவ்விடத்தில் சிறு ஓட்டினால் மூடி, அதன்மேல் பசுஞ்சாணம் வைத்து மூட வேண்டும். பின் பெரிய கலத்தை அடுப்பேற்றி அடுப்பிற்கும் கலத்திற்கும் உள்ள இடைவெளியை மண்ணால் பூசி தீயெரிக்கும்போது சிறிய கலத்தில் உள்ள துவாரங்களின் வழியாகத் தைலம் இறங்கும்.

15) குழித்தைலக் கருவி:

ஒரு குடுவையின் அடியில் மூன்று சிறு துவாரங்களிட்டு, அதனுள் தைலம் இறக்க வேண்டிய சரக்குகளை இட்டு வாயைமூடி சீலைமண் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பூமியில் பள்ளம் தோண்டி அதனுள் பீங்கான் பாத்திரத்தை வைத்து, அதன் நடுவில் முன்சொன்ன குடுவையின் அடிபாகத்திலிட்ட துவாரம் நடுவில் இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். பின் குடுவை மறைய எருவை அடக்கிப் புடம் போடத் தைலம் முழுவதும் அடியில் உள்ள பீங்கானில் இறங்கி இருக்கும். அதனை எடுத்துப் பத்திரப்படுத்தவும்.

16) சுடர் தைலம்:

சுடர் தைலம் பெறவேண்டிய சரக்கை எண்ணையில் முன்னரே ஊறப்போட்டு வைத்திருந்தாவது அல்லது சரக்குகளைக் கல்வத்திலிட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அரைத்து ஒரு சீலையில் தடவித் திரியாகச் சுற்றி வைத்திருந்த சரக்கை நீண்ட குறட்டினை உபயோகித்து பற்றிப் படித்துக் கொள்ள வேண்டும். பின் அந்தச் சரக்கைத் தீயிட்டு எரியச் செய்து அதனடியில் ஒரு கோப்பையை வைத்துச் சரக்கின் மேல் ஊற்றும்படி கூறப்பட்ட நெய்வகைகளில் ஏதேனும் ஒன்றை சுடரின் மேல் சிறிது சிரிதாக ஊற்ற எரிந்து கீழே உள்ள பாத்திரத்தில் சொட்டும். இதனை எடுத்துப் பத்திரப்படுத்தவும்.

17) வாலுகா இயந்திரம்:


ஒரு மண்கலத்தில் இரண்டு அல்லது மூன்று விரற்கடை மணலை நிரப்பி அதன்மீது ஏழு சீலை செய்து மருந்திட்ட காசிக்குப்பியை வைத்துக் கழுத்தளவு மணல் கொட்டி பரப்பிப் பாகத்தில் கூறிய வண்ணம் குப்பியின் வாயைமூடியோ அல்லது மூடாமலோ எரித்தெடுக்க பயன்படும் இயந்திரமாகும்.

18) செந்தூரம் எரிக்கும் சட்டி:

ஒரு முழ அகலமும், ஒரு சாண் உயரமும் உள்ள இரண்டு சட்டிகளை களிமண்ணால் அடிபகுதி மட்டமாகவும், ஒரு சட்டியின் வாய்க்குள் மற்றொன்று பொருந்துமாறும் அமைக்க வேண்டும்.

19) ஊது இயந்திரம்:

பூமியில் ஒரு குடுவையைப் புதைத்து அதன் கழுத்தில் துருத்தியின் குழை நுழையும்படி துளை செய்து சொருகி இடைவெளி இல்லாமல் மண்பூசி துருத்தியை தரைமட்டத்திற்கு மேலே ஊதுவதற்கு வசமாய் அமைத்துக் கொள்க. பின் குடுவையின் வாய்க்குப் பொருத்தமான ஒரு அகலின் மத்தியில் மூன்று சிறு துவாரமிட்டு வாய்மூடி இடைவெளி இல்லாமல் மண்பூசி அதனைச் சுற்றி நாலு அல்லது ஐந்து அங்குல உயரமுள்ளதாக மண்மேடு அமைந்து உலை வாய் கட்டவும். இதுவே உலோகம் உருக்கவும், செந்தூரம், சுண்ண வகைகள் முடிக்கப் பயன்படும் ஊது இயந்திரமாகும்.

20) தீநீர், திராவக வாலை:
திராவக வாலை
தீநீர் வாலை

தீநீர் அல்லது திராவகம் எடுக்க வேண்டிய சரக்குகளை ஒரு மண்கலத்திலிட்டு அதற்குத் தகுந்த மண்வாலை அமைத்துச் சீலைமண் செய்து காயவிட வேண்டும். பிறகு அடுப்பேற்றி எரிக்கும்போது வாலையின் மேல் குழையை அடைத்துக் குளிர்ந்த நீர் ஊற்றி வைக்க அந்த நீரானது சிறிது சிறிதாக வெப்பமாகும். அவ்வாறு நீர் வெப்பமடையும் போதெல்லாம் குழையை திறந்து பழைய நீரை வெளியேற்றியபின் மீண்டும் குளிர்ந்த நீரை விட்டு எரிக்க உட்புறமாக எழும் ஆவியானது நீராக உள்பகுதியில் நிரம்பி கீழ்குழையின் வழியாகச் சொட்டும். இதுவே தீநீர் அல்லது திராவகம் இறக்கப் பயன்படும் உயர்ரக வாலையாகும்.

21) மடக்கு வாலை:

முன்கூறப்பட்ட வாலையில் நீர்விடும் மேல் பாகத்தின் நடுவில் நீர் தங்கும் அளவிற்குமேலாக உயரம் இருக்கும் பொருட்டு ஒரு குழை அமைத்துக் கொள்ளவும். ஒருமுறை சரக்குகளைக் கலத்திலிட்டு திராவகம் பெற்றபின் மீண்டும் அதே அளவான சரக்கையிட்டு வாலையை சொருகி சீலை செய்து காய்ந்தபின் அடுப்பேற்றி எரிக்கும் தருவாயில் முன்பு பெறப்பட்ட திராவகத்தை புதிதாக மேல்பகுதியில் அமைத்த குழையின் வழியாக ஊற்ற, திராவகமானது மண்கலத்தின் அடியில்சென்று புதிதாக உள்ள சரக்குடன் கலக்கும். பின் அந்தக் குழையை கல்கார்க் மூலம் அடத்துவிட்டு முன்போல நூர் ஊற்றி எரிக்கத் திராவகம் விரைவில் வெளியேறும்.

(குறிப்பு:-
1) முதல்முறை திராவம் பெற்றவுடன் மறுமுறை திராவகம் பெறுமுன் அடிக்கலத்தை மாற்ற வேண்டும். வாலையை மட்டும் திராவகம் பெற்ற பின் நீரில் மூழ்கும் படி 3 மணி நேரம்வரை ஊறப்போட்டு உலர்த்த வேண்டும்.
2) இந்தத் திராவகமானது அதிக காரமானது. இதனைப் பிணியாளர்க்கு உள்ளுக்கு கொடுக்க வேண்டின், சாதாரணமாக ஒருமுறையில் கிடைக்கும் திராவகத்தினுடைய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவாகக் கொடுக்க வேண்டும்.)

அகத்தியர் சத்திராயுத விதி : மின்னூல்





இந்தப் பதிவில் அகத்தியர் சத்திராயுத விதி எனும் மின்னூலை இணைத்து உள்ளேன். இந்நூல் அகத்தியர் நயன விதி 500 என்னும் நூலின் ஒரு பகுதியாக உள்ளது. இந்நூலில் மொத்தம் இருபத்தியாறு (26) அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளது. இந்த நூலில் அறுவை சிகிச்சை கருவிகளின் பெயர்கள் மற்றும் அளவுகள் கொடுக்கப்பட்டு உள்ளது எனினும்  அதனதன் பயன்பாடுகள் என்ன என்று கூறவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் அகத்தியர் நயன விதி  500 என்னும் நூலின் பின்னிணைப்பாக வருவதால் இவைகள் பெரும்பாலும் கண் சம்பந்தமான அறுவை சிகிச்சையில் பயன்பட்டவையாக இருக்கலாம்.


                        இந்த மணிக்கடை நூலை மின்னூலாகப் பெறுவதற்க்கு கீழே சொடுக்கி எனது தனிப்பட்ட புலனத்தில் நூலை பெற்றுக் கொள்ளலாம். (Google Drive மூலம் நூலை பெறுவதில் சில சிக்கல்கள் தொடர்ந்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நூல் கேட்டு கிடைக்காதவர்கள் எமது புலனத்தை தொடர்பு கொண்டு நூலை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.)

செவ்வாய், 3 டிசம்பர், 2019

வர்ம முத்திரைகள்



நாட்டியத்தில் கைவிரல்களை நீட்டியும், மடக்கியும், சுழற்றியும் பலவிதமாக அபிநயம் செய்யும் முறையே முத்திரைகள் எனப்படும். இது நாட்டியத்திற்கு மேலும் அழகையும், கவர்ச்சியையும் தருகிறது. அதேபோல வர்மக்கலையிலும் சிலவகையான முத்திரைகள் உள்ளன. இவை கைகளில் ஆயுதம் இல்லாத தருணங்களில், தாக்கவரும் சமயங்களில் தற்காப்பிற்கும், தாக்கவும் பயன்படுகிறது. மேலும் இம்முத்திரைகள் வர்ம அடிபட்டவரை காப்பாற்றும் வர்ம இளக்கு முறையிலும் பயன்படுகிறது.


பொதுவாக வர்மக்கலையில் பனிரெண்டு முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இவை மட்டுமல்லாது வேறுபல முத்திரைகளும் உள்ளன. அந்த முத்திரைகள் பெரும்பாலும் மேற்கூறப்பட்ட பனிரெண்டு முத்திரைகளின் விரிவுகளாகவே (Variation) உள்ளன. இனி வர்மக்கலையில் பன்னெடும் காலங்களாகப் பயிலப்பட்டு வரும் முத்திரைகளை பற்றிப் பார்க்கலாம்.

1) யானை முக முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் மடக்கி, நடு விரலை மாத்திரம் மடக்கிய நிலையிலேயே சற்று மேலே உயர்த்தி யானையின் துதிக்கையை போலக் காட்ட வேண்டும். இது "யானை முக துத்திரை" எனப்படும்.

2) குதிரை முக முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் மடக்கி ஆள்காட்டி விரலை மாத்திரம் மடக்கிய நிலையிலேயே சற்று உயர்த்தி கட்டை விரலை நன்றாக அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே "குதிரை முக முத்திரை".

3) சர்ப்ப முத்திரை:

கை விரல்களில் ஆள்காட்டி விரலை மாத்திரம் சற்று தூக்கி நிறுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். இது "சர்ப்ப முத்திரை" ஆகும்.

4) சக்தி முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் நீட்டி ஒன்றோடு ஒன்று இணைத்து இறுக்க பிடிக்க வேண்டும். இதுவே "சக்தி முத்திரை" எனப்படும்.

5) விஷ்ணு முத்திரை:

கை விரல்களின் நடுவிரலையும் , ஆள்காட்டி விரலையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து நேராக நிறுத்த வேண்டும். கட்டை விரலால் மற்ற இரண்டு விரல்களையும் அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே "விஷ்ணு முத்திரை" ஆகும்.

6) சக்கர முத்திரை:

ஆள்காட்டி விரலை மாத்திரம் விறைப்பாக வலுவாகத் தூக்கி நிறுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். இது "சக்கர முத்திரை" எனப்படும்.

7) சங்கு முத்திரை:

கை விரல்கள் நான்கையும் பாதியாக மடக்கி கட்டை விரலை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதைப் பார்ப்பதற்கு சங்கின் அடிப்புறம் போல் இருக்கும். இது "சங்கு முத்திரை" எனப்படும்.

8) வேல் முத்திரை:

ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் ஆகியவற்றை  நீட்ட  வேண்டும். நீட்டிய விரல்கள் வலுவாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களையும் மடக்கிப் பிடிக்க வேண்டும். இதுவே "வேல் முத்திரை" எனப்படும்.

9) திரிசூல முத்திரை:

ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் வலுவாக நீட்டிக் கொள்ள வேண்டும். மற்ற விரல்களை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே "திரிசூல முத்திரை".

10) பஞ்ச முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் பிரித்துப் பாதியாக மடக்கி விரல்களை வலுவுள்ளதாக வைக்க வேண்டும். இதுவே "பஞ்ச முத்திரை" எனப்படும்.

11) புறங்கை முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் மடக்கி வலுவாகப் பிடிக்கும்போது பையின் மேல் முட்டிப் பகுதியை வலுவாக நிறுத்த வேண்டும். இதுவே "புறங்கை முத்திரை".

12) புறங்கால் முத்திரை:

காலை விறைப்பாக நீட்டிக் காலின் குதிகாலை வலுவாகத் தூக்கி நிறுத்த வேண்டும். இதுவே "குதிகால் முத்திரை" எனப்படும்.

களரி - நிலைகளும் இதன் பயன்களும்


கஜ வடிவு (யானை நிலை) :
ஸ்திரத்தன்மை, முதுகு, இடுப்பு மற்றும் தொடை பகுதி தசைகளுக்கு வலிமை.

அசுவ வடிவு (குதிரை நிலை) :
ஆற்றல், முதுகு எலும்புகளுக்கு வலிமை.

சிம்ஹ வடிவு (சிங்க நிலை) :
தாக்குதல் தொடுக்க தயார் நிலை, வேகம்.

மச்ச வடிவு (சுறாமீன் நிலை) :
எடை குறைந்த நிலை, முன்னோக்கி தாக்கும் திறன், குதிக்கும் திறன்.

மயூர வடிவு (மயில் நிலை) :
வேகம், புறப்பார்வை, தாக்குதலில் இருந்து தப்பி விலகும் திறன்.

வராக வடிவு (காட்டுப்பன்றி நிலை) :
விடாமுயற்சி, தன்முனைப்பு, பலமாக குத்தும் திறன்.

மர்ஜர வடிவு (பூனை நிலை) :
விழிப்புணர்ச்சி, அமைதி, தாக்குதலின் போது மகத்தான ஆற்றல்

சர்ப்ப வடிவு (பாம்பு நிலை) :
அதிவேகமாக தாக்கும் திறன், நெகிழ்வுத்திறன்

குக்குட வடிவு (சேவல் நிலை) :
முன்னோக்கி பாயும் திறன், அடி, குத்து, வெட்டு முதலியவற்றை விறைந்து செய்யும் திறன்.

கருட வடிவு (கழுகு நிலை) :
இதன் பயன்கள் யாதெனில் கால்கள், இடுப்பெலும்பு, தோள்பட்டை எலும்புகள் பலப்படும். ஒளிவு முறையினை பயிலும் போது விரைவாக அமர்ந்து எழ முடியும். கால்கள் ஸ்திரத்தன்மை பெறும்.

சிலம்பத்தில் சுவடு முறைகள்



மறத்தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சார கருவூலமாகவும். புறநானூற்று வீர மரபின் பெரும் பகுதியாகவும், .. களரி, வர்மம், குத்துவரிசை, சைலாத் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிலம்பக்கலையின் வரலாற்றையும், அதன் பிரிவுகளையும் பற்றி முந்தைய பதிவுகளில் போதுமானவரை தெரிந்து கொண்டோம். இனி இந்தப் பதிவில் நமது தமிழர் கலையாம் சிலம்பத்தில் பயின்று வரும் சுவடு முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

சிலம்பத்தில் சுவடு என்பது கால்களை மாற்றி மாற்றி வெவ்வேறு நிலைகளில் வைத்து ஆடும் முறையாகும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி வைத்து விளையாடுவதால் எதிரி எந்தத் திசையிலிருந்து எப்படி தாக்கினாலும் அந்த அடியைத் தடுக்கவோ அல்லது திருப்பி அடிக்கவோ முடியும். ஆசான் சிலம்பம் பயிலும் மாணவர்களுக்கு முதலில் கைகளில் ஆயுதம் ஏதுமின்றி இந்தச் சுவடு முறைகளை மட்டும் பயிற்றுவிப்பார். மாணவர்கள் இம்முறையில் தேர்ந்த பிறகு கைகளில் கம்பு கொண்டு இந்தச் சுவடு முறைகளைப் பயில்வர். பொதுவாகச் சிலம்பத்தில் 18 வகையான சுவடு முறைகள் உள்ளன. அவை,

01) சுவடு:

இது சிலம்பத்தில் உள்ள எல்லா வகையான ஆட்ட முறைகளையும் குறிக்கும் பொதுச்சொல்.

02) தெக்கன் சுவடு:

இது தமிழகத்தில் பயின்று வரும் தெற்கன் களரி எனும் முறையாகும்.

இதன் பிரிவுகள்:
  • மெய்பாடம்
  • ஒற்றைச் சுவடு
  • இரட்டைச் சுவடு
  • சீன அடி
  • முதுகு ஒட்டிச் சுவடு
  • குறுந்தடிச் சிலம்பம்
  • நெடுந்தடி
  • பூட்டும் பிரிவும்
  • கைப்போர்
  • சைலாத்
  • அடி பிடி மல்
  • மண்ணடிமல்
  • நடசாரி
  • ஆயுதப் பிரயோகம்
  • பரடு போன்றவை.,


03) வடக்கன் சுவடு:

இது கேரளாவில் ஆடப்பட்டுவரும் வடக்கன் களரி எனும் முறையாகும்.

இதன் பிரிவுகள்:
  • வந்தனம்
  • மெய்பயற்று
  • ஆயுதப்பயற்று
  • முச்சாண்
  • கதாயுதம்
  • ஒட்டாப்பயற்று
  • கட்டாரி
  • குந்தம்
  • வாள்-கேடயம்
  • நெடுவடி
  • உறுமி
  • வெறுங்கை முறை
  • ஆள் மாறாட்டம்
  • வியுகங்கள் போன்றவை...


04) பொன்னுச்சுவடு:

இது இடையில் பதுங்கி, பம்மல் செய்து, பாய்ந்து, பூனைப்போலும், பொன் போலும் அடியெடுத்து போர் புரியும் முறை.

05) தேங்காய்சுவடு:

தேங்காய் கண் போன்று அமைந்துள்ள  வட்டப் பகுதிகளுக்குள் கால் வைத்துப் பயிற்சி செய்யும் முறை.

06) ஒத்தைச் சுவடு:

மூன்று வட்டங்களுக்குள் ஒரு காலை ஊன்றி இருபுறமும் திரும்பும் முறை.

07) குதிரைச் சுவடு:

நான்கு பக்கமும் வரும் எதிரியைத் தாக்குவதற்கான கால் வைக்கும் முறை.

08) கருப்பட்டிச் சுவடு:

சதுர வடிவில் அமைந்துள்ள வட்டப் பகுதிகளுக்குள் வீடுகட்டும் முறை. எதிரிகளை நெருங்கவிடாமல் இம்முறையில் சுழற்றலாம்.

09) முக்கோணச் சுவடு:

முக்கோண வடிவில் அமைந்துள்ள வட்டங்களுக்குள் கால்வைத்து பயிற்சி செய்யும் முறை. இம்முறை திருப்பத்திற்கு பயன்படுகிறது.

10) வட்டச் சுவடு:

எதிரிகள் இருவர் சுழன்று போரிடும் முறை.

11) மிர்ச்சைச் சுவடு:

மேற்கண்ட அனைத்து கால்வைப்பு முறைகளும் கலந்து போரிடுதல்.

12) சர்ச்சைச் சுவடு:

எதிரியைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் முறை. இம்முறையில் நிற்பவர் எந்தப் பக்கம் தாக்குவாரென ஊகிக்க முடியாது.

13) கிளவி வரிசை:

பாட்டுப்பாடி எதிரியின் உடலில் உள்ள வர்மங்களைச் சுட்டி சிலம்படிக்கும் முறை (தற்போதைய குறுந்தடிச் சிலம்பம்).

14) கதம்ப வரிசை:

குருவிடம் வணக்கம் செய்வதற்காகப் பலவித வீச்சுக்களையும் கலந்து செய்யும் போர்முறை.

15) சக்கர கிண்டி:

எதிரிகள் பலர் சூழ்ந்து நிற்கும்போது, எதிரிகளின் வியுகத்தை உடைக்கும் போர்முறை (படைவீச்சில் இம்முறை பயன்படுகிறது).

16) சித்திர சிலம்பம்:

சிலம்பத்தில் வரும் தீப்பாண வீச்சு முதலிய அனைத்து அலங்கார சிலம்ப வகைகளும் இம்முறையில் அடங்கும்.

17) கருநாடக வரிசை:

தொன்மையான பழைய போர்முறை. வெறுங்கை அடிமுறைகள் ஆகும். தற்போது "நடசாரி" "கருநாடக சுவடு அடிமுறை" என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது.

18) கள்ளர் விளையாட்டு:

இது பொதுவாகத் தமிழகத்தில் விளையாடப்படும் நெடுங்கம்படி முறையாகும்.


ஆதாரம்: தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் (VOL-II)

பழந்தமிழ் போர்க்கருவிகள்:



  1. வளைவிற்பொறி
  2. கருவிரலூகம்
  3. கல்லுமிழ் கவண்
  4. கல்லிடுகூடை
  5. இடங்கணி
  6. தூண்டில்
  7. ஆண்டலையடுப்பு
  8. கவை
  9. புதை
  10. அயவித்துலாம்
  11. கைப்பெயர் ஊசி
  12. எரிசிரல்
  13. பன்றி
  14. பனை
  15. எழு
  16. மழு
  17. சீப்பு
  18. கணையம்
  19. சதக்களி
  20. தள்ளிவெட்டி
  21. களிற்றுப்பொறி
  22. விழுங்கும் பாம்பு
  23. கழுகுப்பொறி
  24. புலிப்பொறி
  25. குடப்பாம்பு
  26. சகடப்பொறி
  27. தகர்ப்பொறி
  28. அரிநூற்பொறி
  29. குருவித்தலை
  30. பிண்டிபாலம்
  31. தோமரம்
  32. நாராசம்
  33. சுழல்படை
  34. சிறுசவளம்
  35. பெருஞ்சவளம்
  36. தாமணி
  37. முசுண்டி
  38. முசலம்
  39. வளரி

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழர் ஆயுதம் - வளரி



வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாகக் கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவதுண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாகச் சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாகச் சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாகக் கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

வளரி மான் வேட்டையின்போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்று இருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் "மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடியே (வளரி) திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.

களரி - தெற்கன் களரி





சிலம்பம்:



‘காப்பென்றகம்புமுறைசுவடுனோடு
கருவானஒழிவுமுதல்பிரிவுதானும்
நாப்பென்றகைபெருக்கம்மெய்பெருக்கம்
நலம்பெரியபூட்டுகளும்தடுத்தல்தட்டல்
காப்பென்றசர்குருவின்முனிவர்பாதம்
சரியாமல்எப்போதும்நினைக்கவேணும்
கோப்பென்றஎடுத்தெறிதல்வர்மம்செய்தல்
கூறுவேன்கோபிகட்குஈந்திடாதே’



சிலம்பத்தில் பயிற்றுவிக்கப்படும் பயிற்சிகள்:
  1. உடற்பயிற்சிகள்
  2. சுவடு முறைகள்
  3. அடி முறைகள்
  4. தடி முறைகள்
  5. ஆயுதப் பெருக்கம்
  6. குஸ்தி வரிசைகள்
  7. மல்லு வரிசைகள்
  8. கசரத் வரிசைகள்
  9. பூட்டு - பிரிவுமுறைகள்
  10. வர்ம பிரயோகங்களும் வைத்தியமும்
1. உடற்பயிற்சிகள் :

(i)  எடையில்லாப்பயிற்சிகள் :
  • உக்கி (Dandal)
  • இடுப்பைத் திருகுதல் (Hip twisting)
  • உடலைச் சுழற்றுதல் (Trunk rotation)
  • குனிந்து எழுதல் (Trunk bending)
  • கால் விரித்தல் (Leg stretching)
  • துள்ளுதல் (Jumbing)
(ii)  எடைப்பயிற்சிகள் :
  • எடையுடன் உட்கார்ந்து எழுதல் (Squat with weight)
  • கர்லாகட்டை சுழற்றுதல் (Club rotations)
  • இளவட்டக்கல் தூக்கி மறித்தல் (Stone lifting)
  • சந்துலாக்கல் தூக்குதல் (Hole stone lifting)
(iii)  யோகப்பயிற்சிகள் :
  • இயம - நியமங்கள்
  • யோகாசனங்கள்
  • மூச்சுப்பயிற்சிகள்
  • தியானங்கள்
2. சுவடுமுறைகள் :

“ஆதியந்தசுவடுமுறை
     அருமையாய்சொல்லக்கேள்
நீதியாகஅறுபத்திநாலும்
     நலமாகஉரைப்பேன்இங்கே’’ 
(அகஸ்தியர்சுவடுமுறை-64)


“தட்டாகசுவடுமுறை
தயவாகபன்னிரெண்டேயாச்சு’’ 
                                                                                                                        (அகஸ்தியர்சுவடுமுறை-64)


  1. ஒற்றை சுவடுகள்
  2. இரட்டை சுவடுகள்
  3. பிரிவுச் சுவடுகள்
  4. சோடிச் சுவடுகள்
  5. கூட்ட சுவடுகள்
  6. சீன சுவடுகள்
  7. வடக்கன்வழிச் சுவடுகள்
  8. தெக்கன்வழிச் சுவடுகள்
  9. வாலிவழிச் சுவடுகள்
  10. பீமன் வரிசை சுவடுகள்
  11. மல்லன் வரிசை சுவடுகள்
  12. நேர் சுவடுகள்
  13. நேர் குறுக்கு சுவடுகள்
  14. வட்டச் சுவடுகள்
  15. சதுரச் சுவடுகள்
  16. முக்கோணச் சுவடுகள்
  17. தேங்காய்ச் சுவடுகள்
  18. சைலாத்துச் சுவடுகள்
  19. ஒழிவுச் சுவடுகள்
  20. அங்கச் சுவடுகள்
  21. இரட்டையங்கச் சுவடுகள்
  22. மல்லங்கச் சுவடுகள்
  23. மறியங்கச் சுவடுகள்
  24. துள்ளங்கச் சுவடுகள்
  25. சூடியங்கச் சுவடுகள்
  26. நிலையங்கச் சுவடுகள்
  27. பாவலாச் சுவடுகள்
  28. தட்டுவர்மச் சுவடுகள்
  29. பொன்னுச் சுவடுகள்
  30. குதிரைச் சுவடுகள்
  31. பன்றிச் சுவடுகள்
  32. புலிச் சுவடுகள்
  33. கோழிச் சுவடுகள்
  34. பெருக்கச் சுவடுகள்
  35. தடவறைச் சுவடுகள்
  36. அறுபத்திநாலங்கச் சுவடுகள்
3. அடிமுறைகள் :

  • நடசாரி அடிமுறைகள்
  • பீமன்வரிசை அடிமுறைகள்
  • சைலாத்து அடிமுறைகள்
  • தடவறவழி அடிமுறைகள்
4. தடிமுறைகள் :

  • குறுந்தடி (2 சாண் - 5 சாண்)
  • நெடுந்தடி (நெற்றிமுட்டும்அளவு)
i) குறுந்தடிமுறைகள் :

“நாட்டமுடன் எட்டுவிரலோடு இருசாண்
சாற்றிய ஒட்டை தடியதை முறித்து’’
                                                                                                            (பீமன்வழிகுறுந்தடிசிரமம்-120)

  • பீமன்வழி குறுந்தடி சிரமம்
  • அனுமன்வழி குறுந்தடி சிரமம்
ii) நெடுந்தடிமுறைகள் :

வரிசைகள் :

1 - 14    ஒன்று முதல் பதினான்கு வரிசைகளுக்கு பெயர் குறிப்பிடாமல்  'நெடுஞ்சிலம்பக் கலை'
15) கணபதி வரிசை
16) சக்தி வரிசை
17) சிவன் வரிசை
18) விஷ்ணு வரிசை
19) இடையன் வரிசை
20) பனையேறி மல்லன் வரிசை
21) காவடி சிந்து வரிசை
22) காவிய வரிசை
23) குடிகார வரிசை
24) பீமன் வரிசை
25) போர் வரிசை
26) கரடிக் குன்னல் வரிசை
27) ஐயங்கார் வரிசை
28) மராட்டிய வரிசை
29) சறுக்கு வரிசை
30) துலுக்க பாண வரிசை
31) கிழவன் வரிசை
32) சாம்புவர் வரிசை
33) மறவன் வரிசை
34) பதுங்கல் வரிசை
35) அச்சர (மறை) வரிசை
36) முடவன் வரிசை
37) சிவதாண்டவ வரிசை
38) நாகபாண வரிசை
39) கங்கண வரிசை
40) நாகபந்த வரிசை
41) குறவஞ்சி இயக்கம் வரிசை
42) குறவஞ்சி கள்ளம் வரிசை
43) சிங்கப் பாய்ச்சல் இறக்க வரிசை
44) காட்டுக்காளை இறக்க வரிசை
45) காட்டான் வரிசை
46) பன்றி விலக்கு வரிசை
47) குடம் கரக்கி வரிசை
48) மூட்டுச்சிலா வரிசை
49) வெட்டும் சக்கர வரிசை
50) கவுனெரி வரிசை
51) பிரம்மாஸ்திர வரிசை
52) கடகாஸ்திர வரிசை
53) திரிதோச வரிசை
54) திரிசூல வரிசை
55) பஞ்சபூத வரிசை
56) வெட்டுவிழும் சக்கர வரிசை
57) வாலி வரிசை
58) மல்லன் வரிசை
59) சாமி வரிசை
60) அம்மன் வரிசை
61) கூடல்வழி சிரம வரிசை
62) சறுக்கு வரிசை
63) படைவீச்சு
64) இரெட்டு

5. ஆயுதப்பெருக்கம் :

1) கத்தி மற்று கட்டாரி முறைகள்
2) வெட்டுக்கத்தி மற்றும் வீச்சரிவாள் முறைகள்
3) கண்டக் கோடாரி முறைகள்
4) மடு (மான்கொம்பு)
5) மரு (இருமுனைக்கூர்வாள்)
6) வாளும் கேடயமும்
7) சுருட்டு வாளும் (சுருள்பட்டா) கேடயமும்
  •        ஓரிலை சுருள்
  •        இரட்டைச் சுருள்
  •        மூவிலைச் சுருள்
8) வேல்கம்பு (ஈட்டி) வரிசை
9) கதாயுத வரிசை
10) இடிகட்டை வரிசை
11) கல் வீச்சு
12) வளரி வீச்சு
13) சங்கிலித்தொடர் வீச்சு
14) அலங்கார வரிசைகள்
  •         பூப்பாண வெட்டு
  •         சங்கிலிப்பாண வெட்டு
  •         சக்கரப்பாண வெட்டு
  •         தீப்பாண வெட்டு

6. குஸ்திவரிசைகள் :
“ பாருலகில் குஸ்தி மல்யுத்தம் படித்திட்டால்
பலமது இருக்கும் வரை..................”

7. மல்வரிசைகள் :
  1. அடிபிடி மல்லு
  2. கட்டு மல்லு
  3. எறி மல்லு
  4. மண்ணடி மல்லு
8. கசரத்வரிசைகள் :
  1. மல்லன் கசரத்
  2. தண்டால் கசரத்
  3. பயில்வான் கசரத்
  4. சக்கர கசரத்
  5. மறி கசரத்
  6. பாய்ச்சல் கசரத்
  7. நிலை கசரத்
  8. சாட்டக் கசரத்
  9. தெண்டில் கசரத்
  10. தவளை கசரத்
  11. அணில் கசரத்
  12. பாம்பு கசரத்
9. பூட்டு - பிரிவுமுறைகள் :

1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள்
14) துதிக்கைப் பூட்டு (அ) அடித்தகைப் பூட்டு
15) ஒற்றைகைப் புறப் பூட்டு
16) மலத்திக்கைப் புறப் பூட்டு
17) கவிழ்த்திகைப் புறப் பூட்டு
18) ஏந்துகைப் புறப் பூட்டு
19) இடுப்புப் பிடி
20) கூட்டிச் சேர்த்துப் பிடி (அகப்பிடி)
21) அடக்கிப் பிடி (கல்லிடைப்பிடி)
22) குடும்பிப் பிடி
23) சதைப் பிடி (பள்ளைப்பிடி)
24) வள்ளக்கை பிடி
25) மூட்டு முறித்தான் பூட்டு
26) விரல்முறி பூட்டு
27) வலம்புரிப் பூட்டு
28) இடம்புரிப் பூட்டு
29) வெற்றிலைகாலப் பூட்டு
30) நட்சத்திரக்காலப் பூட்டு
31) அடியறக்காலப் பூட்டு
32) நெஞ்சடைப்பான் பூட்டு
33) நெஞ்சுபிழந்தான் பூட்டு
34) கடுவாய் பிடி
35) தாடிப் பிடி
36) புறம் பிடி
37) கம்மல் பிடி (அரசவாரி)
38) வழிபார்த்தான் பிடி
39) இடைகோரிப் பிடி
40) கடுக்கன் கழற்றிப் பூட்டு
41) கள்ளன் பிடி
42) ஒடுக்குப் பிடி
43) கவிழ்த்திப் பிடி
44) மூச்சடக்கிப் பிடி
45) பிடித்து இழுத்தெறி
46) வழுந்து குஞ்சி
47) எடுத்தெறி
48) வானம் பார்த்தான்
49) சூடிப் பிடி
50) கவிழ்த்திக்கால் பிடி
51) சங்காயப் பூட்டு
52) தாலாட்டுப் பிடி
53) வள்ளிப் பூட்டு
54) பின்னல் பூட்டு
55) கீழ்வாரிப் பூட்டு
56) மேல்வாரிப் பூட்டு
57) சிங்கப் பூட்டு
58) குதிரைப் பூட்டு
59) தோளேந்திப் பூட்டு
60) சிப்பிறப் பூட்டு
61) ஆனைவாரிப் பூட்டு
62) சிப்பிறப் பூட்டு
63) கத்திரிபிடி
64) மதமடக்கிபிடி

பைரி :
  1. ஆறுதீண்டாப் பைரி
  2. கண்டூசப் பைரி
  3. சரபுராப் பைரி
  4. நீலகண்டப் பைரி (சவரிக்கட்டு)